Home /News /automobile /

E-Lock, ரிவர்ஸ் மோடு மற்றும் பல அம்சங்களுடன் Hero Eddy எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா

E-Lock, ரிவர்ஸ் மோடு மற்றும் பல அம்சங்களுடன் Hero Eddy எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா

e-scooter Hero Eddy

e-scooter Hero Eddy

Hero Eddy E-Scooter | ஹீரோ எடி ஸ்கூட்டர் வாங்கிப் பயன்படுத்தும் போது, அதை ரிஜிஸ்ட்ரேசன் செய்ய வேண்டியதில்லை, லைசன்ஸ் தேவையில்லை என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் சார்பில் புதிய எலெக்ட்ரிக் டூ வீலர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய வாகனத்தின் பெயர் ஹீரோ எடி ஆகும். Find my Bike (வாகனத்தை கண்டறிதல்), இ-லாக், கால்களை வைத்துக் கொள்ள விசாலமான இடவசதி, ஃபாலோ மீ ஹெட்லேம்ப், ரிவர்ஸ் மோடு, கிளீனர், கிரீன் ரைடர் போன்ற பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு கலர்களில் வருகின்றன. மஞ்சள் மற்றும் லைட் ப்ளூ ஆகிய நிறங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஹீரோ எலெக்ட்ரிக் என்பது இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமாகும். ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பை பலப்படுத்த தங்கள் நிறுவனம் தொடர்ந்து பாடுபடும் என்று அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எலெக்ட்ரிக் வாகன ஓட்டிகளின் தேவையை மிகுதியாக பூர்த்தி செய்யும் வண்ணம் ஹீரோ எலெக்ட்ரிக் இருக்கும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழில் துறையிலும் இந்த நிறுவனம் கால் பதித்துள்ளது.

ஹீரோ நிறுவனம் என்பது இந்தியாவில் உள்ள பழமையான மற்றும் மிகப் பெரிய டூ வீலர் உற்பத்தி நிறுவனமாகும். ஹீரோ எடி-யின் விலை ரூ.72,000 ஆக நிர்ணயிக்கப்படும் என்று ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய வாகனம் குறித்து ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவீன் முஞ்சால் கூறுகையில், “ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் ஸ்டைலான லுக் ஆகியவற்றுடன் சாலையில் கவர்ந்திழுக்கும் வகையிலான ஹீரோ எடி என்ற வாகனத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.



தடையில்லாமல் நீண்ட தூரம் டிரைவ் செல்ல, கார்பன் இல்லாமல், பாதுகாப்பான சுற்றுசூழல் கொண்ட எதிர்கால உலகை அமைக்க அவரது தனிப்பட்ட பங்களிப்பு அளிப்பதற்கான விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கிலும் இந்த ஸ்கூட்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சௌகரியமும், தேவையும் உள்ளவர்களுக்கு நல்லதொரு மாற்று வாகனமாக ஹீரோ எலெக்ட்ரிக் எடி இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.

Also Read : பசுமை ஹைட்ரஜன் பாலிசி பற்றி முக்கிய விவரங்கள்!

லைசென்ஸ் வேண்டாம், ரிஜிஸ்ட்ரேசன் வேண்டாம்

ஹீரோ எடி ஸ்கூட்டர் வாங்கிப் பயன்படுத்தும் போது, அதை ரிஜிஸ்ட்ரேசன் செய்ய வேண்டியதில்லை என்றும், லைசன்ஸ் தேவையில்லை என்றும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read : நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் ஓட கூடிய வித்தியாசமான வாகனம்!

கடந்த மாதம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி அளிப்பதற்காக எஸ்பிஐ வங்கியுடன் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதேபோன்று மஹிந்திரா நிறுவனத்திடமும் ஹீரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. வளர்ந்து வரும் தேவைகளை கருத்தில் கொண்டு, மத்தியப் பிரதேச மாநிலம், பிதம்பூரில் உள்ள மஹிந்திரா தொழிற்சாலையில் ஹீரோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஆப்டிமா மற்றும் என்.ஒய்.எக்ஸ். ஆகிய மாடல்களை தயார் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Hero

அடுத்த செய்தி