Home /News /automobile /

ஆண்டுக்கு 50 லட்சம் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள்... புதிய இலக்கை நிர்ணயித்த ஹீரோ நிறுவனம்!

ஆண்டுக்கு 50 லட்சம் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள்... புதிய இலக்கை நிர்ணயித்த ஹீரோ நிறுவனம்!

ஹீரோ நிறுவனம்

ஹீரோ நிறுவனம்

இந்தியாவில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மட்டுமின்றி, அதனை வாங்கும் பயணிகளுக்கும் சலுகை, மானியம் போன்றவற்றை அரசு அறிவித்து வருகிறது. மக்களும் மாறி வரும் பருவநிலை, காற்று மாசு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கணிசமாக வளர்ந்து வருவது அதனை உறுதி செய்துள்ளது. உதாரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் 54,557 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனை ஜனவரி மாத விற்பனையை விட 18% வளர்ச்சி ஆகும். இந்த விற்பனையில் இந்தியாவின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக்ல் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனமான ஹீரோ முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்நிறுவனம் 7,356 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் இந்தியாவில் 30% பங்குகளை இந்த நிறுவனம் வைத்துள்ளது.

ஹீரோ நிறுவனம் ஃபோட்டான் எச்எக்ஸ், ஆப்டிமா எச்எக்ஸ் (டூயல் பேட்டரி), ஆப்டிமா எச்எக்ஸ் (சிங்கிள் பேட்டரி), என்ஒய்எக்ஸ் எச்எக்ஸ்(டூயல் பேட்டரி), ஆப்டிமா எல்எக்ஸ், ஃப்ளாஷ் எல்எக்ஸ், ஏட்ரியா எல்எக்ஸ் போன்ற எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதன் விலையும் சாமானியர்கள் எதிர்பார்க்கும் அளவில் இருப்பதால், பலதரப்பட்ட மக்களும் இதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை பெருகி வரும் நிலையில், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்காக ரூ. 1,500 2000 கோடி முதலீட்டை ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்திக்காக இந்தியாவின் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இரண்டு பெரிய கிரீன் ஃபில்ட் தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்தையும் ஹீரோ நிறுவனம் வகுத்துள்ளதாக தெரிகிறது.

ALSO READ |  புதிய MG ZS எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய MG Motor India!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருவதாக ஹீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவீன் முன்ஜால் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இயக்கி வரும் இருசக்கர வாகனங்களில் சுமார் 30 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறியிருக்கும் என கணித்துள்ளார்.

ஹீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவீன் முன்ஜால் கூறுகையில், “தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் கடந்த சில நாட்களாக எங்களுடைய பிசினஸை இழந்து வருகிறோம். ஆன்லைன் ஆர்டர் முறையை நிறுத்திவிட்டோம். நிலுவையில் உள்ள ஆர்டர்களை நிறைவேற்றுவதற்காக டீலர்ஷிப் விரிவாக்கத்தை குறைத்துள்ளோம்.

எனவே தான் அடுத்த நிதியாண்டில் இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை மும்மடங்காக அதாவது 3 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்”. ஆனால் 2022-ம் ஆண்டில் ஹீரோ நிறுவனம் 2 மடங்கு அதிகமான உற்பத்தியை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electric bike, Electric car

அடுத்த செய்தி