Home /News /automobile /

உங்கள் காரின் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்க உதவும் டாப் 5 டிப்ஸ்கள்!

உங்கள் காரின் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்க உதவும் டாப் 5 டிப்ஸ்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Fuel Efficiency | நீங்கள் லைட்டான காரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் சரி, ஆனால் உங்கள் கார் பெரியதாக மற்றும் ஹெவியாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அதிக ஆற்றல் மற்றும் எரிபொருள் தேவைப்படும். ஒருவேளை புதிய கார் வாங்கும் யோசனை இருந்தால் பெரிய எஸ்யூவியை விட சிறிய காரை தேர்ந்தெடுப்பது உங்கள் எரிபொருள் கட்டணத்தை குறைக்க பெரிதும் உதவும்.

மேலும் படிக்கவும் ...
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை மிகவும் அதிகரித்து காணப்படும் நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகளின் பயணத்தை கடினமாக்கி இருக்கிறது கொளுத்தும் கோடை வெயில்.

அதே நேரத்தில் அதிக எரிபொருள் விலை பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போரின் பாக்கெட்டை பதம் பார்க்கிறது. பலரின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி இருந்தாலும், புதிய வாகனம் வாங்க விரும்புவோரின் பரிசீலனையாக மட்டுமே அவை இருக்கின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனம் இல்லாதவர்கள், எரிபொருள் அல்லது சிஎன்ஜி வாகனத்தை பயன்படுத்துபவர்கள் அவற்றை சிறந்த முறையில் நிர்வகிப்பது மற்றும் பயன்படுத்துவதே செய்ய கூடிய ஒரே வழி.

ஒவ்வொரு முறை டேங்க் ஃபுல் செய்யும் போதும் உங்கள் கார் அதிக தூரம் செல்வதை உறுதி செய்வது, அதிகரித்து வரும் எரிபொருள் விலையை ஈடுசெய்வதற்கான மிக சிறந்த வழிகளில் ஒன்றாகும். எரிபொருள் செலவை குறைத்து உங்கள் கார் கூடுதல் மைலேஜ் கொடுக்க உதவ கூடிய சில முக்கிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்..

குறைவான பயன்பாடு & லைட்டான கார் :

எரிபொருள் பயன்பாட்டை குறைக்க நீங்கள் செய்ய பல விஷயங்கள் இருந்தாலும் பலன் தர கூடிய செயல்களில் ஒன்று உங்கள் காரை நீங்கள் அதிகம் பயன்படுத்தாமல் குறைவாக பயன்படுத்துவதே.. சிறிது தொலைவு செல்வதற்கு கூட காரை பயன்படுத்துவோரை பார்க்க முடிகிறது. எனவே தொலைவு சிறியது என்றால் முடிந்தால் நடக்கவும் அல்லது சைக்கிளில் செல்லலாம். அதே போல நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வாகனத்தின் அளவும் எரிபொருள் செலவில் முக்கிய பங்கு வகிக்கிறது.



நீங்கள் லைட்டான காரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் சரி, ஆனால் உங்கள் கார் பெரியதாக மற்றும் ஹெவியாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அதிக ஆற்றல் மற்றும் எரிபொருள் தேவைப்படும். ஒருவேளை புதிய கார் வாங்கும் யோசனை இருந்தால் பெரிய எஸ்யூவியை விட சிறிய காரை தேர்ந்தெடுப்பது உங்கள் எரிபொருள் கட்டணத்தை குறைக்க பெரிதும் உதவும். சிறிய காரை ஓட்டினாலும் அதிக லோட் ஏற்றாமல் அந்த காரை ஓட்டுவதும் முக்கியம்.

Also Read : டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான வழிகள் என்னென்ன?

எக்கோ-டிரைவிங் டெக்னிக்ஸ் :

உங்கள் எரிபொருள் நுகர்வு குறித்து விழிப்புடன் இருப்பதும் அதை குறைக்க நடவடிக்கை எடுப்பதும் எக்கோ-டிரைவிங்கில் அடங்கும். ஒவ்வொரு முறையும் நீங்கள் பிரேக் பயன்படுத்தி வாகனத்தின் வேகத்தை குறைக்கும் போது அல்லது நிறுத்தும் போது, நீங்கள் விரும்பிய வேகத்தை மீண்டும் அடைய அதிக ஆக்ஸலரேட் கொடுக்க வேண்டியிருக்கும்.

இப்படி ஆக்ஸலரேட் செய்யும் போது வாகனம் அதிக ஆற்றல் மற்றும் எரிபொருளை பயன்படுத்துகிறது. எனவே சீரான வேகத்தில் வாகனம் ஓட்டுவது, அடிக்கடி வாகனத்தை நிறுத்தாமல் இருப்பது உள்ளிட்டவை எரிபொருள் கட்டணத்தைச் சேமிக்க உதவும். நீங்கள் மேனுவல் வாகனம் பயன்படுத்தினால் எஞ்சின் சுமை மற்றும் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க முடிந்தவரை ஹையஸ்ட் கியரில் ஓட்டவும். ஆட்டோமேட்டிக் வாகனம் என்றால் eco செட்டிங்கை பயன்படுத்தலாம்.



தேவை இல்லாத போது காரை ஆஃப் செய்யலாம் :

கார் மூவிங்கில் இல்லாத போது காரின் எஞ்சினை இயக்கத்தில் வைப்பது விலைமதிப்பற்ற எரிபொருளை வீணாக்குவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகிறது. எனவே நீங்கள் டிராஃபிக்கில் அல்லது வேறு எங்காவது கணிசமான நேரம் காரிலேயே காத்திருக்கப் போகிறீர்கள் என்றால் கார் என்ஜினை அணைப்பதே சரியாக இருக்கும்.

Also Read : பட்ஜெட் விலையில், அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியல் இதோ..

ஏசி ஆஃப்:

உங்கள் காரின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 4% முதல் 8% வரை ஏர் கண்டிஷனர் எடுத்து கொள்ளும். எனவே தேவைப்படாத போது ஏசி-யை ஆஃப் செய்து விட்டு கார் ஜன்னல்களை திறந்து விட்டு இயற்கையான காற்றை அனுபவித்து கொண்டே கார் டிரைவ் செய்யலாம்.

Also Read : மாருதி சுசுகி அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ள 5 நியூ மாடல் கார்கள்!

டயர் பிரஷர்:

வாகனத்திற்கும் தரைக்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு டயர்கள் மட்டுமே. டயர்கள் உருளுவதில் சிக்கல் ஏற்பட்டால் அதற்கேற்ப அதிக என்ஜின் சக்தி மற்றும் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பரிந்துரைக்கப்பட்ட டயர் பிரஷர் அல்லது சற்று அதிக டயர் பிரஷரை பராமரிப்பது எரிபொருளை சேமிக்க பெரிதும் உதவும். சரியான டயர் பிரஷரை பராமரிப்பது எரிபொருள் பயன்பாட்டில் 2% முதல் 4% வரை சேமிக்க உதவும்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Car

அடுத்த செய்தி