முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / Hyundai Venue 2022: புதிய ஹூண்டாய் வென்யூ 2022 - அம்சங்கள் மற்றும் எப்போது அறிமுகம்.. புதிய தகவல்கள்!

Hyundai Venue 2022: புதிய ஹூண்டாய் வென்யூ 2022 - அம்சங்கள் மற்றும் எப்போது அறிமுகம்.. புதிய தகவல்கள்!

Hyundai Venue 2022. (Photo: Hyundai)

Hyundai Venue 2022. (Photo: Hyundai)

Hyundai Venue 2022 | டைட்டன் கிரே, டைட்டன் கிரே டூயல்-டோன், போலார் ஒயிட் டூயல் டோன், டைஃபூன் சில்வர், போலார் ஒயிட், ஃபியரி ரெட் மற்றும் டெனிம் ப்ளூ உள்ளிட்ட 7 கலர் ஆப்ஷன்களிலும், 9 வேரியன்ட்ஸ்களிலும் ஹூண்டாய் வென்யூ கிடைக்கிறது. இந்நிலையில் புதிய 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வரும் என்ற தகவல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய் விரைவில் 2022 ஹூண்டாய் வென்யூ காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. கடந்த 2019 -ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஹூண்டாய் வென்யூ கார் இந்தியாவில் சப் காம்பேக்ட் SUV பிரிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் போன்ற பல முனை போட்டியை சந்தித்தாலும் கூட ஹூண்டாயின் வென்யூ மாடல் சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளது. இந்த ஹூண்டாய் வென்யூ SUV காரானது ரூ.6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த காரின் அடிப்படை மாடல் விலை ரூ.6.92 லட்சத்தில் துவங்கி, டாப் மாடலின் விலை ரூ.11.78 லட்சமாக உள்ளது.

டைட்டன் கிரே, டைட்டன் கிரே டூயல்-டோன், போலார் ஒயிட் டூயல் டோன், டைஃபூன் சில்வர், போலார் ஒயிட், ஃபியரி ரெட் மற்றும் டெனிம் ப்ளூ உள்ளிட்ட 7 கலர் ஆப்ஷன்களிலும், 9 வேரியன்ட்ஸ்களிலும் ஹூண்டாய் வென்யூ கிடைக்கிறது. இந்நிலையில் புதிய 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வரும் என்ற தகவல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய 2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் ஒரு புதிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிளாட் பாட்டம் லெதர் வ்ரேப்ட் ஸ்டீயரிங் வீல், புதிய ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜர், 6-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் புதிய அப்ஹோல்ஸ்டரி போன்ற அம்சங்களுடன் வரலாம் என்று தெரிகிறது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் 2022 ஹூண்டாய் வென்யூ கார் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வரவிருக்கும் 2022 ஹூண்டாய் வென்யூ பற்றி வெளியாகி இருக்கும் சில தகவல்களை இங்கே பார்க்கலாம்..

எஞ்சின் ஆப்ஷன்கள்..

83 பிஎச்பி பவரை வெளியிடும் 1.2-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின், 120 எச்பி பவரை வெளியிடும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் மற்றும் 90 பிஎச்பி பவரை வெளியிடும் 1.4-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-டீசல் யூனிட் உள்ளிட்ட மூன்று எஞ்சின்ஆப்ஷன்களுடன் வரும் என தெரிகிறது. 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Also Read : எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய கட்டுக்கதைகளும்..உண்மைகளும்!

அதே சமயம் 1.4-லிட்டர் டர்போ-டீசல் எஞ்சின் மற்றும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட்டுடன் ஸ்டாண்டர்டாக வரும். இதன் அடிப்படை மாடலான Hyundai Venue E ரூ.6.92 லட்சம் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. இந்த வேரியன்ட் ஏபிஎஸ், சென்ட்ரல் லாக்கிங், ஸ்பீட் சென்சிங் டோர்ஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டூயல் ஃப்ரண்ட் பேக்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த வாகனம் 5-இன்ச் ஸ்டீல் அலாய்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் Venue E போலார் ஒயிட் மற்றும் டெனிம் ப்ளூ கலர்களில் மட்டுமே கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். Hyundai Venue E ரூ.6.92 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியில் விரைவில் சிஎன்ஜி ஆப்ஷன் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read : இந்தியாவின் சிறந்த 7 சீட்டர் கார்கள் என்னென்ன? அவற்றின் சிறப்பம்சங்கள் இதோ!

top videos

    புதிய வென்யூவின் பக்கவாட்டில் புதிய அலாய் வீல்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. இதன் லுக் முன்பை விட மிகவும் போல்டாக தோன்றினாலும் ஸ்போர்ட்டியாரக இல்லை. டிசைனை பொறுத்த வரை இந்த காரில் குரோம் கிரில், உடல் நிற விங் மிரர்ஸ் மற்றும் எஸ் வேரியண்டில் ரூஃப் ரெயில்ஸ் உள்ளன. அனைத்து அடிப்படை மாடல் அம்சங்களுக்கும் மேலாக கீலெஸ் என்ட்ரி, ரியர் டிஃபோகர், ஹில் அசிஸ்ட் (டிசிடியில் மட்டும்), பவர் விங் மிரர்கள், கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் ஸ்டீயரிங்-மவுண்ட்டட் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை பெறலாம். வென்யூவின் S Plus வேரியன்ட்டுடன் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் 8 இன்ச் டச் ஸ்கிரீன் போன்ற கூடுதல் அம்சங்கள் கிடைக்கும்.

    First published:

    Tags: Automobile, Hyundai