• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • பிரதமர் துவக்கி வைத்த Vehicle Scrappage Policy நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாகனத் துறைக்கு எவ்வாறு உதவும்!

பிரதமர் துவக்கி வைத்த Vehicle Scrappage Policy நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாகனத் துறைக்கு எவ்வாறு உதவும்!

 Vehicle Scrappage Policy

Vehicle Scrappage Policy

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கை, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பொருத்தமற்ற மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை பயன்பாட்டிலிருந்து வெளியேற்ற உதவும்.

  • Share this:
பிரதமர் நரேந்திர மோடி பழைய வாகன அழிப்பு கொள்கையை (Vehicle Scrappage Policy) நாட்டில் நேற்று துவக்கி வைத்துள்ளார். பெருகி வரும் மாசுக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பழைய வாகனங்கள் சாலைகளில் இருந்து அகற்றுவதை நோக்கமாக கொண்டதே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களை உபயோகத்தில் இருந்து நீக்கும் கொள்கையான Vehicle Scrappage Policy. தானியங்கி அடிப்படையில் எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த இந்த கொள்கை முடிவை, நேற்று குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் அறிமுகம் செய்தார்.

குஜராத் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் இந்தக் கொள்கையை துவக்கி வைத்த மோடி, இளைஞர்களை இந்த கொள்கை திட்டத்தில் சேருமாறு கேட்டுக்கொண்டார். திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் கொள்கை, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பொருத்தமற்ற மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை பயன்பாட்டிலிருந்து வெளியேற்ற உதவும். சுற்றுசூழல் பொறுப்பு அனைவருக்கும் இருக்கும் நிலையில் அனைத்து stake holders-க்கும் ஒரு பொருளாதார வட்டத்தை உருவாக்கி மதிப்பை கொண்டு வருவதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே வாகன ஃபிட்னஸ் சென்டர்கள் மற்றும் ஸ்கிராப் யார்டுகளில் சுமார் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ரூ.10,000 கோடி கூட்டு முதலீட்டை அரசு எதிர்பார்க்கிறது. வாகன ஃபிட்னஸ் டெஸ்ட் செலவு வாகனங்களின் வகையைப் பொறுத்தது. ஒரு தனிப்பட்ட வாகனத்திற்கு (personal vehicle) ரூ.300- ரூ.400 செலவாகும், அதே நேரத்தில் ஒரு கமர்ஷியல் வாகனத்திற்கு ரூ.1,000- ரூ.1,500 கட்டணமாக இருக்கும். மறுபுறம் இந்த வாகன ஸ்கிராப்பேஜ் பாலிஸி உலோக மறுசுழற்சி வணிகத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். மேலும் இது இந்திய வாகனத் தொழிலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று Grant Thornton வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வாகன நீக்கு கொள்கை இந்திய பொருளாதாரத்திற்கும், வாகனத் துறைக்கும் எவ்வாறு உதவும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

மாசு குறைப்பு:

மேற்கத்திய நாடுகளை போல ஒரு வாகனத்தின் ரிஜிஸ்டரேஷன் முடிந்ததும் ஸ்கிராபேஜ் கொள்கை நடைமுறைக்கு வருகிறது. பொதுவாக ஒரு பயணிகள் வாகனம் (passenger vehicle) 15 வருட ஆயுள் மற்றும் ஒரு கமர்ஷியல்வாகனம் 10 வருட ஆயுள் கொண்டது. இந்த கெடுவிற்கு பிறகும் அவை பயன்பாட்டில் இருப்பது அதி தீவிரமாக சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. இப்படிப்பட்ட வாகனங்களை புழக்கத்தில் இருந்து அப்புறப்படுத்துவது நாட்டின் கார்பன் ஃபுட் பிரிண்டை குறைக்க உதவுகிறது.

வட்டப் பொருளாதாரம்:

வாகனச் சீர்திருத்தக் கொள்கை நாடு ஏற்றுக்கொண்ட Circular Economy முயற்சிகளின் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இக்கொள்கை வாகனங்களில் பயன்படுத்தப்படும் எஃகு, அலுமினியம், பிளாஸ்டிக் போன்ற முக்கிய பொருட்களை மீட்பதை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டது. ஸ்கிராப்பிங் அறிவியல் செயல்முறையை மேம்படுத்துவதன் மூலம், பழைய வாகனங்களில் இருந்து எடுக்கப்படும் முக்கிய உலோக பொருட்களை கார் உற்பத்தி உட்பட பல்வேறு தொழில்களில் மீண்டும் பயன்படுத்த முடியும்.

புதிய வாகனங்கள் விற்பனை..

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாகன நீக்கு கொள்கை சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சாலைப் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வாகனப் பதிவு கட்டணங்கள் மற்றும் குறைக்கப்பட்ட சாலை வரி வடிவத்தில் நிதி ஊக்கத்தொகைகள் மூலம் புதிய வாகனங்களை விற்பனை செய்வதை இந்த கொள்கை ஊக்குவிக்கிறது.

Also read... ஹேரியர், சஃபாரியில் நியூ வேரியண்ட் - புது மாடல்களை களமிறக்கிய டாட்டா!

வேலை வாய்ப்புகள்..

வாகன ஸ்கிராப்பிங் கொள்கை கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் பதிவு செய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகள் (RVSF) மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதற்கான சென்டர்கள் நாடு முழுவதும் மாவட்ட அளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சென்டர்களில் எல்லாம் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 -ன் படி உமிழ்வு (emission), பிரேக்கிங் / பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் இதர சோதனைகள் நடத்த வேண்டும். இதற்கான ஆட்களை நியமிக்க வேண்டும் என்பதால் இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் மாநிலங்கள் அதிக முதலீடுகள் மற்றும் பொருளாதார நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. வாகன ஸ்கிராப்பிங் கொள்கையை பயனுள்ளதாக மாற்றி கொள்வது மாநிலங்கள் வகுக்கும் ஆதரவு கொள்கைகளை பொறுத்தும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: