Home /News /automobile /

மாற்றியமைக்கப்பட்ட யமஹா லிபரோ ரெட்ரோ பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா.? 

மாற்றியமைக்கப்பட்ட யமஹா லிபரோ ரெட்ரோ பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா.? 

Yamaha Libero

Yamaha Libero

Yamaha Libero | யமஹா நிறுவனத்தின் கிளாஸிக் பைக்கான RX100-ன் தாக்கமாகவே லிபரோ உருவாக்கப்பட்டது.

ஆங்கிலத்தில் ‘ஓல்ட் இஸ் கோல்டு’ என்ற ஒரு பழமொழி உண்டு. அதாவது காலத்திற்கு ஏற்றார் போல் என்ன தான் புதுப்புது டெக்னாலஜி மற்றும் மாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், பழசுக்கு இருக்கும் மவுசு எப்போதும் குறையாது என்பது தான் அதன் பொருள். இந்த விஷயம் மோட்டார் வாகனங்களுக்கு சரியாக பொருந்தும், தாத்தா வைத்திருந்த கார், அப்பா வைத்திருந்த பைக் என பழைய வாகனங்களை புதுப்பித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. சின்ன வயதில் அப்படி பொக்கிஷமாக பாதுகாக்க தவறிய வாகனங்களை வளர்ந்து இளைஞராக மாறிய பிறகு பார்க்கும் போது, எவ்வளவு விலை கொடுத்தாவது அதனை வாங்க வேண்டும் என்ற ஆர்வமும் பலரிடமும் உண்டு.

அப்படி லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் கொடிகட்டி பறப்பது ரெட்ரோ ரக பைக்குகள். எந்த ஒரு டெக்னாலஜி வசதிகளும் இல்லாமல் முற்றிலும் பழைய வடிவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளை வாங்கவே பல வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். இதற்காக ராயல் என்பீல்டு, ஜாவா, ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் போட்டா போட்டி வரும் நிலையில், யமஹா நிறுவனமும் அதில் இணைந்துள்ளது. யமஹா லிபரோ பைக்கை ரெட்ரோ மாடலாக மாற்றி களமிறங்கியுள்ளது.

பழைய ராஜ்தூத், புல்லட் அல்லது ஜாவா போன்ற பைக்குகளின் வரிசையில், யமஹா லிபரோ மிகவும் சேகரிக்கக்கூடிய பைக்குகளில் ஒன்றாக உள்ளது. இருப்பினும், ஏற்கனவே நல்ல பைக்கை இன்னும் சிறப்பாக உருவாக்க முடியும் என்பதை காட்டுவதற்காக ஐதராபாத்தை தளமாகக் கொண்ட எய்மோர் கஸ்டம்ஸ், யமஹா லிபரோவை ஒரு கவர்ச்சியான பைக்காக மாற்றியுள்ளது.யமஹா நிறுவனத்தின் கிளாஸிக் பைக்கான RX100-ன் தாக்கமாகவே லிபரோ உருவாக்கப்பட்டது. 1985களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைக், அப்போது வெளியான அதிக செயல்திறன் கொண்ட பைக்குகளில் ஒன்று ஆகும். இந்த பைக் இன்னும் இருசக்கர வாகன ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.

Also Read : பட்ஜெட் விலையில், அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியல்.. பைக் வாங்க போகும் முன் இதை தெரிஞ்சுக்கங்க...

பைக்கின் வெளிப்புறம் தோற்றம் அசல் மேட் பிளாக் ஸ்டீல் விளிம்புகளுடன் சங்கி டயர்களால் கவர் செய்யப்பட்டுள்ளது. பிளாக் ஸ்டீல் மற்றும் சில்வர் நிறத்துடன் பைக்கின் தோற்றம் கவர்ந்திழுக்கிறது, இதற்கு மேலும் கவர்ச்சியூட்டும் விதமாக மஞ்சள் மற்றும் கருப்பு பின்ஸ்ட்ரைப்களால் நிரப்பப்பட்ட பச்சை டேங்கில் யமஹா லோகோ ஸ்டிக்கருடன் கருப்பு ஃபெண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Also Read : யமஹா FZ-S Fi பைக்கின் விலை, மைலேஜ் மற்றும் இதர அம்சங்கள் இதோ!

முன் ஃபோர்க்குகள் இரண்டு முனைகளிலும் ஆஃப்டர்மார்க்கெட் டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு புதிய ரவுண்ட் ஹெட்லேம்பில் மெஷ்-ஸ்டைல் ​​கார்டு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அசல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ட்வின்-பாட் யூனிட்களுடன் மாற்றப்பட்டுள்ளது. பைக்கில் ஹேண்டில்பார் மாற்றியமைக்கப்பட்டு இப்போது பார்-எண்ட் மிரர்களை உள்ளடக்கியுள்ளது. அதேபோல் சுவிட்ச் கியரும் மாற்றப்பட்டுள்ளது.

Also Read : கேடிஎம் 2022 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்!

பைக்கிற்கு யமஹா லிபரோவின் ஒரிஜினல் இன்ஜினையே பொருத்தி இருந்தாலும், அதன் தோற்றம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 7.7 பிஎச்பி மற்றும் 7.8 என்எம் செயல்திறனை உற்பத்தி செய்யும் 106-சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் இன்ஜினை கொண்டுள்ளது. பைக்கில் இன்ஜினை பாதுகாக்க இரும்பு தகடு பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் பின்புற டயருக்கும் பாதுகாப்பு தகடு பொருத்தப்பட்டுள்ளது. டைமண்ட் ஸ்டைல் டிசைனில் முழுக்க முழுக்க தோலால் ஆன இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. பின்புற இருக்கைக்கு சற்றே அருகில் டர்ன் இண்டிகேட்டர்களுக்கான டெயில்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில் 80களுக்கும், தற்போதைய நவீன காலத்திற்கும் இடைப்பட்ட சில மென்மையான மாற்றங்களுடன் யமஹா ரெட்ரோ பைக் பட்டையைக் கிளப்புகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Yamaha bike

அடுத்த செய்தி