Home /News /automobile /

பிரதமரின் பாதுகாப்பிற்காக ரூ.12 கோடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Mercedes-Maybach S650 Guard-ன் சிறப்பம்சங்கள்!

பிரதமரின் பாதுகாப்பிற்காக ரூ.12 கோடியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Mercedes-Maybach S650 Guard-ன் சிறப்பம்சங்கள்!

Mercedes-Maybach S650 Guard-ன் சிறப்பம்சங்கள்

Mercedes-Maybach S650 Guard-ன் சிறப்பம்சங்கள்

Mercedes-Maybach S650 கார், VR10 லெவல் பாதுகாப்புடன் கூடிய சமீபத்திய ஃபேஸ் லிஃப்ட் மாடலாகும்.

நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதற்கு முன் பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு ரேஞ்ச் ரோவர் வோக், டொயோட்டா லேண்ட் க்ரூசர் உள்ளிட்ட கார்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிதாக Mercedes-Maybach S650 கார் பிரதமரின் பாதுகாப்பு கான்வாயில் சேர்க்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பிரதமர் ஐதராபாத் வந்த போது Mercedes-Maybach S650 காரில் வந்து இறங்கினார். குண்டுவெடிப்புகளையும் , துப்பாக்கி தோட்டாக்களையும் தாங்கும் சிறப்பம்சம் இந்த காரில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த Mercedes-Maybach S650 கார், VR10 லெவல் பாதுகாப்புடன் கூடிய சமீபத்திய ஃபேஸ் லிஃப்ட் மாடலாகும். அறிக்கைகளின் படி, Mercedes-Maybach கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.10.5 கோடிக்கு S600 கார்டை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் பார்த்தால் தற்போது பிரதமரின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வரும் Mercedes-ன் S650-யின் விலை ரூ.12 கோடிக்கும் மேல் இருக்கும். Mercedes Maybach S650 Guard-ஆனது 6.0-லிட்டர் ட்வின்-டர்போ V12 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 516bhp மற்றும் தோராயமாக 900Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ ஆக இருக்கிறது.

இந்த S650 Guard-ன் பாடி மற்றும் ஜன்னல்கள் கடினமான ஸ்டீல் கோர் தோட்டாக்களையும் (hardened steel core bullets) தாங்கும் வல்லமை படைத்தது. இது 2010 வெடிப்பு சான்று வாகனம் (2010 Explosion Proof Vehicle - ERV) ரேட்டிங்கை பெற்றுள்ளது மற்றும் 2 மீட்டர் தூரத்தில் இருந்து 15kg TNT வெடிப்பிலிருந்து (TNT explosion) இதில் பயணிப்போர் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த பாதுகாப்பு கவச கார் ஜன்னலின் உட்புறம் பாலிகார்பனேட் பூசப்பட்டுள்ளது மற்றும் வாகனத்தின் கீழ் பகுதி நேரடி வெடிப்புகளில் இருந்து பயணிகளை பாதுகாப்பதற்கு தேவையான மற்றும் திறமையான கவச அமைப்புகளுடன் உள்ளது. ஒருவேளை இதையெல்லாம் மீறி விஷவாயு தாக்குதல் சதி ஏதேனும் அரங்கேற்ற முயற்சி நடந்தால், சூழலுக்கு ஏற்ப காரின் கேபினுக்கு ஒரு தனி காற்று விநியோகம் கிடைக்கும் வசதியும் இந்த பாதுகாப்பு கவச வாகனத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

Also read... ஸ்ரீராம் ஆட்டோ மாலுடன் இணைந்து பயன்படுத்திய வாகன வணிகத்தில் நுழைந்த Ashok Leyland!

Also read... ரூ.70,000 பட்ஜெட்டிற்கு கீழ் இந்தியாவில் உள்ள சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்!

போயிங் ஹெலிகாப்டரில் மட்டுமே பயன்படுத்தப்படும் சிறப்பம்சம் ஒன்றும் இந்த காரில் இருக்கிறது. இதன் டீசல் டேங்கில் ஏதேனும் துளை ஏற்பட்டால் உடனடியாக அது தானே அடைத்து கொள்ளும் வகையிலான ஸ்பெஷல் மெட்டீரியல் கோட்டிங் செய்யப்பட்டு உள்ளது. AH-64 Apache டேங்க் அட்டாக் ஹெலிகாப்டர்களுக்கு போயிங் பயன்படுத்தும் அதே மெட்டீரியலால் இந்த காரின் ஃப்யூயல் டேங்க் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டயர்கள் அதி நவீனமானவை. எந்தவித சேதம் ஏற்பட்டாலும் தப்பிப்பதை உறுதி செய்யும் வகையில் டயர்கள் தொடர்ந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: PM Modi

அடுத்த செய்தி