Home /News /automobile /

அதிரடியான புத்தாண்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்ட டாப் 5 கார்கள்!

அதிரடியான புத்தாண்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்ட டாப் 5 கார்கள்!

கார்கள்

கார்கள்

புத்தாண்டு தள்ளுபடி விற்பனை என்று அறிவிக்கப்பட்டிருக்கும் டாப் 5 கார்களின் பட்டியல் இங்கே

பண்டிகை காலம் தொடங்கியது முதல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வந்துள்ளது. கோவிட் தாக்கத்திலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றிருக்கும் ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியும் தொடங்கியுள்ள நிலையில் ஏற்கனவே இருக்கும் மாடல்களின் மீது கணிசமான தள்ளுபடிகளை அறிவித்து வந்துள்ளன. அதே போல, புத்தாண்டு சலுகையாக பல்வேறு வாகனங்கள் மீது எக்கச்சக்கமான தள்ளுபடிகளை பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. புத்தாண்டு தள்ளுபடி விற்பனை என்று அறிவிக்கப்பட்டிருக்கும் டாப் 5 கார்களின் பட்டியல் இங்கே

ரெனால்ட் டஸ்டர் மீது 1.3 லட்ச ரூபாய் வரை தள்ளுபடிகள் :



பிரெஞ்சு நிறுவனமான ரெனால்ட் தன்னுடைய பெஸ்ட் செல்லரில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு அதிகப்படியான தள்ளுபடியை வழங்கியுள்ளது. புத்தாண்டு சலுகையாக ரெனால்ட் டஸ்டரின் விலை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது கேஷ் தள்ளுபடி ரூ. 50,000 மற்றும் எக்ஸ்சேன்ஜ் போனஸாக ரூ. 50,000 அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கார்ப்பரேட் பெனிஃபிட்ஸ் ஆக ரூ. ரூ. 30,000 வழங்கியுள்ளது.

மகேந்திரா எஸ்யூவி XUV300 மீது ரூ. 69,000 வரை தள்ளுபடிகள் :



மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், தனது 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள தனது XUV300 மாடலுக்கு 69 ஆயிரம் ரூபாய் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. கேஷ் தள்ளுபடியாக ரூ. 30,000 மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.25,000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 மதிப்புள்ள துணை பாகங்களும் இலவசமாகவும், ரூ.4,000 மதிப்புள்ள கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்களும் வழங்கப்படுகிறது.

ALSO READ |  ரூ.70,000 பட்ஜெட்டிற்கு கீழ் இந்தியாவில் உள்ள சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்!

ஹுண்டாய் நிறுவனத்தின் ஆரா காரில் ரூ.50,000 வரை தள்ளுபடிகள் :



பல கார்களுக்கும் பயங்கர போட்டியாளராக கருதப்பட்ட ஹுண்டாய் ஆரா காருக்கு ஆண்டு முடிவடையும் நிலையில் 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடிகளை வழங்கியுள்ளது ஹுண்டாய் நிறுவனம். இதன் டர்போ டிரிம் வேரியன்ட்டில் ரூ.50,000 முழு தள்ளுபடியை வழங்கியுள்ளது. CNG வேரியன்ட்டில் கூடுதலாக ரூ.15,000 வரை சலுகைகளும், ஆராவின் மற்ற வேரியண்ட்டுகளில் அந்தந்த மாடலுக்கு ஏற்ப ரூ.25,000 வரை கூடுதல் தள்ளுபடிகளை நிறுவனம் அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி ஆல்டோ 800 மீது ரூ. 48,000 வரை தள்ளுபடிகள் :



இந்தியாவின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரின் ஃபேவரைட் ஆன இந்த ஹேட்ச்பேக், தற்பொழுது கூடுதல் தள்ளுபடியுடன் கிடைக்கிரகுடு. ஆல்டோ காரில் 48 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகளை நிறுவனம் வழங்குகிறது. இதில் ரூ. 30,000 கேஷ் பெனிஃபிட்ஸ் மற்றும் எக்ஸ்சேன்ஜ் போனசாக ரூ.15,000 வரை கிடைக்கிறது. அதுமட்டுமின்றி கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆக ரூ. 3000 வரை வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ |  மின்சார ரேஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது Ducati!

டாடா ஹேரியர் மீது ரூ. 40,000 வரை தள்ளுபடிகள் :



இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மற்றும் இந்திய சாலைகளில் மிகச்சிறந்த எஸ்யூவி ஆக கருதப்படுவது டாடா நிறுவனத்தின் காம்பாக்ட் எஸ்யுவி ஆனா ஹேரியர் தான். ஹேரியருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.



இந்த மாடலுக்கு புத்தாண்டு தள்ளுபடியாக ரூ.40,000 மற்றும் கார்ப்பரேட் டிஸ்க்கவுண்டாக ரூ.25,000 வரை கூடுதலாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இதனுடைய டார்க் எடிஷன் வேரியன்ட்களுக்கு கூடுதலாக ரூ.20,000 சலுகை கிடைக்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Automobile, Cars

அடுத்த செய்தி