ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

எஸ்யூவி கார் வாங்க திட்டமா.? இந்தியாவை கலக்க உள்ள டாப் 3 மாடல்கள் இதோ!

எஸ்யூவி கார் வாங்க திட்டமா.? இந்தியாவை கலக்க உள்ள டாப் 3 மாடல்கள் இதோ!

scorpio N

scorpio N

SUV Cars in India | வாகன சந்தையில் அறிமுகமாகியுள்ள எஸ்யூவி கார்களில் மிகவும் பிரபலமாக உள்ள சில மாடல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் எஸ்யூவி-களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் மக்களிடம் தேவை அதிகரித்து வருகின்றன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல டாப் பிராண்ட் கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே விதவிதமான எஸ்யூவி கார்களை களமிறக்கி வருகின்றன.

ஏற்கனவே வாகன சந்தையில் அறிமுகமாகியுள்ள எஸ்யூவி கார்களில் மிகவும் பிரபலமாக உள்ள சில மாடல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்...

மே 2022ம் ஆண்டு வெளியாகியுள்ள கணக்கிட்டின் படி, வாடிக்கையாளர்கள் பயணிகள் கார்களை வாங்குவதை விட எஸ்யூவி கார்களை அதிக அளவில் வாங்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இது இந்தியாவில் எஸ்யூவிகள் பிரபலமடைந்து வருவதை காட்டுகிறது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, சலுகை மற்றும் அதிக செயல்திறனை உறுதி செய்யும் சக்திவாய்ந்த பவர்டிரெய்ன் ஆகியவை SUV-கள் வாகனம் வாங்குபவர்களின் தேர்வாக இருக்க உதவும் சில காரணங்களாக உள்ளன.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க காத்திருக்கும் டாப் 3 எஸ்யூவி கார்கள் இதோ...

மஹிந்திரா ஸ்கார்பியோ - என்:

இந்திய மக்கள் மத்தியில் எப்போதுமே மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு என்று தனி மரியாதை உண்டு. இந்த ஸ்கார்பியோ எஸ்யூவி 2002-ம் ஆண்டு அறிமுகமானதில் இருந்தே கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான எஸ்யூவி என்ற பெருமையுடன் உள்ளது. இந்நிலையில் புதிய தலைமுறைக்கான ஸ்கார்பியோ என் மாடல் காரை மஹிந்திரா நிறுவனம் ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளது. Z101 என்ற குறியீட்டுப் பெயருடன், புதிய Scorpio-N எனப் பெயரிடப்பட்டுள்ளது. மகேந்திரா ஸ்கார்பியோவில் ஏற்கனவே 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் தான் வெளிவந்தது. தற்போது இதில் மற்றொரு ஆப்ஷனாக 6 ஸ்பீடு டார்க் கண்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வருகிறது. இந்த கார் ஜூன் 27ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா:

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல் டிசைன், எஞ்சின், வசதிகளில் மேம்படுத்தப்பட்டு வந்தது. புதிய விட்டாரா ப்ரெஸ்ஸா, கேபினுக்குள் கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட முன்பகுதி மற்றும் பின் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது, புதிய மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில் கூடுதல் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், ரியர் வியூ கேமரா, ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Also Read : இந்தியாவில் 2022ல் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார்களின் விவரங்கள் இதோ!

ஹூண்டாய் வென்யு:

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஹூண்டாய் நிறுவனத்தின் சிறிய எஸ்யூவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தென் கொரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் வென்யு எஸ்யூவி காரை ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. SUV -யின் வடிவத்தை மாற்ற திருத்தியமைக்கப்பட்ட முன்பக்கத்தில் புதிய கிரில்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஹெட்லேம்ப்கள், சக்கரங்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், கார் திருடு போனால் அதனை கண்டுபிடிக்க உதவும் டிராக்கர் என பல வசதிகள் அடங்கும்.

First published:

Tags: Automobile, India, Suv car