பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்படும் கார்கள் பல வகையில் தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளதால் உலக அளவில் எல்லோரும் மின்சார வாகனங்களை அதிகம் விரும்புகின்றனர். இதற்கு மற்றொரு காரணம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை ஏற்றம் தான். இவற்றை கருத்தில் கொண்டு தான் முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை பல மடங்கு உயர்த்த உள்ளதாக கூறியுள்ளனர். அந்த வகையில், இந்த 2022ல் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் :
இந்த எலெக்ட்ரிக் கார் ஆகஸ்ட் மாதத்தில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார், ஒரு சக்திவாய்ந்த 39.2 kWh லித்தியம்-அயன் பேட்டரியை பெறுகிறது. இது அதிகபட்சமாக 134 bhp ஆற்றலையும், 395 Nm டார்க்கையும் வழங்கும். தயாரிப்பாளரின் கூற்றுப்படி, முழு சார்ஜில் 452 கிலோமீட்டர் தூரத்தை இந்த கார் கடக்க முடியும். இந்த காரில் ஆறு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. காரின் விலை சுமார் ரூ.24 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாட்டா நெக்ஸன் EV மற்றும் EV மேக்ஸ் :
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டாட்டா நெக்ஸன் எலெக்ட்ரிக் கார், தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். 14 லட்சம் விலையில், டாட்டா நெக்ஸன் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்க கூடிய வாகனங்களில் ஒன்றாகும். இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இது அதிகபட்சமாக 127 bhp பவரையும், 245 Nm உச்ச முறுக்கு விசையையும் வெளிப்படுத்துகிறது. டாட்டா நிறுவனம் சமீபத்தில் நெக்ஸன் EV மேக்ஸ் காரை அறிமுகப்படுத்தியது. இது நெக்ஸன் EV-ஐ விட கூடுதல் அம்சங்களுடன் 437 கிமீ வரம்பை வழங்குகிறது.
MG ZS EV :
இந்த வாகனமானது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாக உள்ளது. மேலும் இந்த எலெக்ட்ரிக் கார் இப்போது ஒரு அடையாளத்தை உருவாக்குகிறது. MG ZS EV காரானது தோராயமாக ரூ.26 லட்சம் விலையில் வருகிறது மற்றும் அதன் பயணிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு நவீன தொழில்நுட்பம் நிறைந்த ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. இந்த கார் 50.3 kWh பேட்டரி கொண்டது. இது அதிகபட்சமாக 174 bhp பவரையும், 280 Nm உச்ச முறுக்கு விசையையும் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 461 கிலோமீட்டர் தூரத்தை வழங்குவதாக அதன் நிறுவனம் கூறியுள்ளது.
Also Read : எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி... மத்திய அரசு அதிரடி முடிவு!
ஆடி இ-ட்ரான் :
ஜேர்மன் வாகன உற்பத்தியாளரான ஆடி கார் நிறுவனம், காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு புதிய ஆடம்பரமான காரை மக்களுக்கு வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மிகவும் திறமையான மற்றும் சக்திவாய்ந்த கார்களில் ஒன்றாக உள்ளது. இதன் பீஸ்டி 95 kWh பேட்டரி, அதிகபட்சமாக 300 bhp ஆற்றலையும், 664 Nm-இன் உச்ச முறுக்கு விசையையும் உருவாக்குகிறது. இந்த முழு மின்சார, ஆல்-வீல்-டிரைவ் எலெக்ட்ரிக் கார் ஒரு நம்பிக்கைக்குரிய செயல்திறனை உறுதிசெய்கிறது. மேலும் மக்களின் விருப்பத்தை மிகவும் கலைநயத்துடன் வழங்குகிறது. இந்த காரை முழு சார்ஜிங் செய்தால் சுமார் 430 கிலோமீட்டர் வரை இயங்கும். இந்த ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரின் விலை சுமார் ரூ.1.1 கோடி ஆகும்.
Also Read : Ola-வின் S1 Pro, Ather-ன் 450 Plus, TVS-ன் iQube... இந்த மூன்றில் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.?
ஜாகுவார் ஐ-பேஸ் :
இந்திய சந்தையில் கிடைக்கும் மற்றொரு டாப்-எண்ட் எலெக்ட்ரிக் கார்களின் ஒன்று ஜாகுவார் ஐ-பேஸ். இது 100-கிலோவாட் விரைவான சார்ஜிங்கிற்காக தனித்து நிற்கும் கார் வகையாகும். இந்த கார் நிறுவனம் தங்கள் விரைவான சார்ஜர் மூலம் காரை பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவிகிதம் வரை வெறும் 40 நிமிடங்களில் சார்ஜ் செய்வதாகக் கூறுகிறது. ஜாகுவார் ஐ-பேஸின் சக்திவாய்ந்த பேட்டரி அதிகபட்சமாக 389 பிஎச்பி பவரையும், 696 Nm உச்ச முறுக்கு விசையையும் உருவாக்குகிறது. இந்த கார் வெறும் 4.8 வினாடிகளில் நின்ற நிலையில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டி விடும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric Cars, India