முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ISI அல்லாத ஹெல்மெட் விற்பனையில் ஈடுபட்டால் என்ன தண்டனை தெரியுமா?

ISI அல்லாத ஹெல்மெட் விற்பனையில் ஈடுபட்டால் என்ன தண்டனை தெரியுமா?

ஹெல்மெட் - மாதிரி படம்

ஹெல்மெட் - மாதிரி படம்

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து தலைக்கவசங்களும் இப்போது BIS தர வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்ய வேண்டும்

ISI அல்லாத ஹெல்மெட் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் சேமிப்பு போன்றவற்றிக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) தடை விதித்துள்ளது. இந்த சட்டங்களை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு 2018 நவம்பரில் வெளியிடப்பட்டிருந்தாலும், அதற்கான விரிவான விதிமுறைகள் 2019 இல் வகுக்கப்பட்டன. அதன்படி இந்தியாவில் விற்கப்படும் அனைத்து தலைக்கவசங்களும் இப்போது BIS தர வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல, இந்திய தரநிலைகள் பணியகத்திடம் இருந்து ISI சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

விதிமுறைகளை மீறுவோருக்கு வழங்கப்படும் அபராதம் என்ன?

MoRTH விதித்துள்ள தடையை மீறும் குற்றவாளிகள் எதிர்காலத்தில் மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்பதற்காக இந்திய தர நிர்ணய பணியகத்தின் கீழ் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது. மேலும் ISI அங்கீகரிக்கப்படாத ஹெல்மெட்டுகளில் ISI முத்திரை ஸ்டிக்கரை ஒட்டி முறைகேடான விற்பனையில் ஈடுபட்டால், அந்த குறிப்பிட்ட நபருக்கு ரூ .5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஐ.எஸ்.ஐ அல்லாத ஹெல்மெட் தயாரித்தல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் அல்லது சேமித்து வைக்கும் குற்றவாளிகளுக்கு ரூ .1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதோடு அவர்கள் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

Also Read:   முதலையிடம் இருந்து தனது சகோதரியை காப்பாற்ற இளம் பெண் செய்த காரியம்!

இந்த தடை சர்வதேச உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கிறது?

இந்தச் சட்டத்தில் ISI அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அல்லது அதை விஞ்சும் மற்றும் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஹெல்மெட்கள் அடங்கும். முழுமையான சோதனை காரணமாக சர்வதேச-ஸ்பெக் ஹெல்மெட் பெரும்பாலும் உயர்ந்ததாகக் கருதப்பட்டாலும், இந்திய அரசாங்கம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிக்கும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் மேட்-இன்-இந்தியா மூலோபாயத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. இதன் விளைவாக நமது சந்தையில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

Also Read:   11 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண்: தனது வீட்டருகே காதலன் வீட்டில் ரகசியமாக குடும்பம் நடத்தியது அம்பலம்!

மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளின் ஏற்றுமதி அதிக அளவில் உயரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுதவிர சாலை விபத்தால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதும் முக்கியமான குறிக்கோளாக இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை விட விலை குறைவாக இருக்கிறது. சில மாநிலங்கள் ஒவ்வொரு வாகன விற்பனைக்கும் இரண்டு ஹெல்மெட் கொடுக்க வேண்டும் என இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களை கட்டாயப்படுத்தியுள்ளன.

Also Read:   கொரோனா தொற்றிலிருந்து விரைவாக குணமடைய உதவும் சில யோகா ஆசனங்கள்!

இது போன்ற பல விதிகள் வெளிநாட்டு ஹெல்மெட் உற்பத்தியாளர்களை வெகுவாக பாதித்துள்ளது. உதாரணத்திற்கு பிரிட்டிஷ் உற்பத்தியாளரான ட்ரையம்ப், நாட்டில் ஹெல்மெட் விற்பனையை முற்றிலுமாக நிறுத்தியது. ஐ.எஸ்.ஐ அல்லாத ஹெல்மெட் தடை செய்வதற்கான விவாதம் 2018 இன் பிற்பகுதியில் தொடங்கியபோது, இந்த டீலர்ஷிப்களின் விலையுயர்ந்த தலைக்கவசங்கள் விற்பனையில் சரிவை சந்தித்தன. விற்கப்படாத சரக்கு நிச்சயமாக நிறுவனத்திற்கு மோசமான செய்தி ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக ஒரு பெரிய தொகை முதலீடு செய்யும் பட்சத்தில் இந்த நஷ்டத்தை ஈடு செய்யமுடியாமல் உற்பத்தியை நிறுவனம் தடை செய்தது. வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் தங்கள் தலைக்கவசத்தை நம் நாட்டு தரத்திற்கு சந்தைப்படுத்துவதற்கு முன்பு இந்தியத் தரத்தின் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். சிலர் அதனுடன் முன்னோக்கிச் செல்லலாம் என்றாலும், இங்கு சிறிய அளவில் விற்கும் உயர்நிலை நிறுவனங்கள் அதை சாத்தியமானதாக கருதவில்லை என்பதே உண்மை.

First published:

Tags: Automobile, Helmet