ஒரு ‘ஸ்போர்ட்டி’ அனுபவத்துக்குத் தயாராகுங்கள்! - ‘தெறி’ லுக் உடன் Suzuki Hayabusa

13.74 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமாகும் Hayabusa வில் 1,340cc உடன் 4 ஸ்டோர்க் லிக்விட் குளிரூட்டல் கொண்ட DOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 29, 2018, 12:33 PM IST
ஒரு ‘ஸ்போர்ட்டி’ அனுபவத்துக்குத் தயாராகுங்கள்! - ‘தெறி’ லுக் உடன் Suzuki Hayabusa
Suzuki-Hayabusa
Web Desk | news18
Updated: December 29, 2018, 12:33 PM IST
இந்திய சாலைகளுக்கு ஏற்ப சில திருத்தங்களுடன் அறிமுகமாகிறது சுசூகி நிறுவனத்தின் Hayabusa.

சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் சார்பாக 2019-ம் ஆண்டுக்கான ஸ்போர்ட்ஸ் ரக பைக் ஆக இந்தியாவில் Hayabusa அறிமுகமாகிறது.

13.74 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமாகும் Hayabusa வில் 1,340cc உடன் 4 ஸ்டோர்க் லிக்விட் குளிரூட்டல் கொண்ட DOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Hayabusa உற்பத்தி நிறுத்தப்படப்போவதாக நீண்ட நாள்களாக நிலவி வந்த செய்திகள் குறித்து சுசூகி சில தெளிவுரைகளை வெளியிட்டுள்ளது.

ஜப்பானிய நிறுவனமான சுசூகி, தன்னுடைய மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக் ஆன Hayabusa-வை ஐரோப்பிய சந்தைகளிலிருந்து மட்டும் இந்த ஆண்டுடன் நிறுத்தப்போவதாக சுசூகி தெரிவித்துள்ளது.

சுசூகி Hayabusa-வின் 2019 பதிப்பில் இந்திய வெளியீட்டுக்கு மட்டும் சில திருத்தங்கள் இந்திய சாலைகளுக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளன. Metallic Oort Gray மற்றும் Glass Sparkle Black என இரண்டு நிறங்களில் Hayabusa வெளி வருகிறது.

புதிய அறிமுகம் குறித்து சுசூகியின் நிர்வாக இயக்குநர் சதோஷி உசிடா கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக சுசூகியின் Hayabusa மிகச்சிறந்த ஸ்போர்ட்ஸ் பைக் ஆக இருந்து வருகிறது.
Loading...
இந்தியாவிலும் எங்களது Hayabusa-க்கான வரவேற்பு மிகுதியாகவே உள்ளது. தரமான வெளியீடுகளை தொடர்ந்து வழங்கும் சுசூகி இப்புதிய Hayabusa-வின் 2019 பதிப்பை இந்திய ரசிகர்களுக்காக வழங்குகிறோம்” என்றார்.

மேலும் பார்க்க: வெற்றிகளைக் குவிக்க உதவிய தென்னிந்திய கலாசாரம் - தோனி
First published: December 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...