Home /News /automobile /

எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரை அரசே தள்ளுபடி... மாநில அரசின் ஆஃபரை பெறுவது எப்படி.?

எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரை அரசே தள்ளுபடி... மாநில அரசின் ஆஃபரை பெறுவது எப்படி.?

மின்சார வாகனம்

மின்சார வாகனம்

Discount on Electric Cars | எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு அரசு சார்பில் பல்வேறு வரிச்சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் 80EEB பிரிவின் கீழ் மொத்த வரி விலக்குடன் ரூ.1,50,000/- வரை எலெக்ட்ரிக் வாகனக் கடன்கள் கிடைக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
    இந்திய அரசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு, பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. மக்களும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கார்களின் விலையேற்றம் காரணமாக எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

    எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு அரசு சார்பில் பல்வேறு வரிச்சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் 80EEB பிரிவின் கீழ் மொத்த வரி விலக்குடன் ரூ.1,50,000/- வரை எலெக்ட்ரிக் வாகனக் கடன்கள் கிடைக்கின்றன.

    இந்த சட்டத்தின் கீழ் தனி நபர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு இந்த வரிவிலக்கு உண்டு. இதேபோல் பல்வேறு மாநிலங்களும் மானியங்களுடன் கூடிய ஊக்கத்தொகை அளித்து வருகின்றன. தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ள ஹரியானா அரசு மாநிலத்திற்கான மின்சார வாகன (EV) கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தக் கொள்கையின்படி, மின்சார வாகன உற்பத்தியாளர்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு தங்கள் SGSTயில் 50% திரும்ப பெற முடியும். கூடுதலாக, உற்பத்தியாளர்கள் மாநிலங்களுக்கு இடையேயான மின்சார வாகனங்களை அகற்றும் தொழிற்சாலை அல்லது வசதியை நிறுவ ரூ.1 கோடி வரை ஊக்கத்தொகையைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.



    உற்பத்தியாளர்களுக்கு மட்டுமின்றி மின்சார கார்களை வாங்குவோருக்கும் ஹரியானா அரசு தள்ளுபடியை அறிவித்துள்ளது. புதிய கொள்கையின் படி, ஹரியானாவின் மக்கள் ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையில் விலையுள்ள மின்சார கார்களுக்கு 15 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். இதன் மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு அதிகப்பட்சமாக ₹6 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் காரணமாக, ஹோண்டா சிட்டியின் ஹைப்ரிட் மாடல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    Also Read : மின்சார வாகனங்களை விரைவில் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம்! இதோ அதற்கான புதிய கண்டுபிடிப்பு! 

    அதேசமயம், ரூ.40 லட்சம் முதல் ரு.70 லட்சம் வரையிலான மின்சார வாகனங்களுக்கு 15 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக அதிகபட்சமாக 10 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். ரூ.40 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள ஹைபிரிட் கார்களுக்கு 15 சதவீதம், அதாவது ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

    ₹3 லட்சம் வரை தள்ளுபடி:

    புதிய எலக்ட்ரிக் வாகனக் கொள்கையின் கீழ், ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் விலையில் ₹3 லட்சம் வரை பிளாட் தள்ளுபடி உள்ளது. இதன் விலை ₹19.53 லட்சம் மற்றும் இப்போது 15% தள்ளுபடிக்குப் பிறகு ₹2.9 லட்சம் வரை விலை குறைவாக கிடைக்கும்.



    இந்நிறுவனம் இந்த காரின் பெட்ரோல் யூனிட்டில் மட்டும் 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4-சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் எஞ்சினை பயன்படுத்தியுள்ளது, அதன் இன்ஜின் 98PS ஆற்றலையும் 127Nm முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. அதே நேரத்தில், மின்சார மோட்டாருக்கான சக்தி 126PS-யை மற்றும் 253Nm முறுக்குவிசை கொண்டது.

    Also Read : ஒருமுறை சார்ஜ் செய்தால் 1,000 கிமீ செல்லும் எலெக்ட்ரிக் பேட்டரியை உருவாக்கும் சீன நிறுவனம்.!

    ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ₹48,000 மானியம்

    இந்த புதிய EV பாலிசியின் கீழ், மின்சார வாகன உற்பத்தியாளர்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு தங்கள் SGSTயில் 50% திரும்ப பெற முடியும். மின்சார வாகனங்கள், மின்சார வாகனங்களின் பாகங்கள், EV பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும். பேட்டரி அகற்றும் அலகுகளை அமைக்கும் நிறுவனங்களும் நிலையான மூலதன முதலீட்டில் ₹1 கோடி வரை, அதாவது 15 சதவீதம் வரை திரும்ப பெற முடியும். கூடுதலாக, ஹரியானா EV பாலிசி 2022யின் படி, EV நிறுவனங்களில் பணிபுரியும் ஹரியானாவின் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் வீதம் 10 ஆண்டுகளுக்கு மானியத்தை உறுதி செய்துள்ளது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Automobile, Electric car, India

    அடுத்த செய்தி