பேட்டரி திறன் கொண்ட முதல் எலெக்ட்ரிக் சைக்கிளை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்!

ஹார்லி டேவிட்சனின் அடுத்த வெளியீடாக எலெக்ட்ரிக் பைக் ‘லைவ் வயர்’ சந்தையில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 24, 2019, 9:22 PM IST
பேட்டரி திறன் கொண்ட முதல் எலெக்ட்ரிக் சைக்கிளை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன்!
ஹார்லி டேவிட்சன்
Web Desk | news18
Updated: August 24, 2019, 9:22 PM IST
பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் சைக்கிளை வெளியிட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன் வருடாந்திர டீலர்கள் சந்திப்பில் இந்த முதல் எலெக்ட்ரிக் சைக்கிள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எலெக்ட்ரிக் பைக்குகள் குறித்த தனது எண்ணத்தை ஹார்லி டேவிட்சன் தெரிவித்திருந்தது. இந்த வரிசையிலேயே தற்போது எலெக்ட்ரிக் பைக்குகள் வெளியாக உள்ளன.

எலெக்ட்ரிக் சைக்கிளை மூன்று ரகங்களில் ஹார்லி டேவிட்சன் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஸ்போர்ட்டி தோற்றத்துடன் கரடு முரடனான பாதைகளுக்கும் ஏற்ற சைக்கிள்களாக வடிவமைப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த நிறுவனத்தின் அறிவிப்பில், “மிகவும் எடை குறைவான, வேகமான, யாராலும் எளிதில் கையாளும் வகையில் சைக்கிள் வடிவமைப்பு இருக்கும்.


இரு சக்கர வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் வருகிற புதிய தலைமுறையினரையும் கருத்தில் கொண்டு ஹார்லி டேவிட்சன் இத்தகைய எலெக்ட்ரிக் சைக்கிள்களை அறிமுகம் செய்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சனின் அடுத்த வெளியீடாக எலெக்ட்ரிக் பைக் ‘லைவ் வயர்’ சந்தையில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: அப்போலோ மருத்துவமனை வளாகங்களில் இனி எலெக்ட்ரிக் சார்ஜிங் வசதி - மத்திய அரசு ஒப்பந்தம்
First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...