Home /News /automobile /

இந்தியாவில் அறிமுகமானது Harley-Davidson-ன் புதிய Sportster S - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகமானது Harley-Davidson-ன் புதிய Sportster S - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Harley-Davidson-ன் புதிய Sportster S

Harley-Davidson-ன் புதிய Sportster S

இந்தியாவில் Sportster S-க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
ஹார்லி-டேவிட்சன் இந்தியா (Harley-Davidson India) நிறுவனம் தனது புதிய பைக்கான Harley-Davidson Sportster S-ஐ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.15.51 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் பைக். உலகளாவிய சந்தைகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Sportster S பைக்கானது, Pan America 1250 அட்வென்ச்சர் டூரிங் மாடலின் அறிமுகத்திற்குப் பிறகு இந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஹார்லி-டேவிட்சனின் இரண்டாவது பெரிய அறிமுகமாகும். இந்தியாவில் Sportster S-க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் மிகப்பெரிய அம்சம் அதன் 1250 சிசி லிக்விட் கூல்டு, வி-ட்வின் இன்ஜின் (1250 cc liquid cooled, V-twin engine) ஆகும். இதே எஞ்சின் தான் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் Pan America 1250 அட்வென்ச்சர் டூரிங் மோட்டார் சைக்கிளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 119.3bbhp பவரையும், 127.4Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த மேம்பட்ட எஞ்சினில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நியூ ஜென்ரேஷன் மோட்டார் சைக்கிளின் எடையை குறைக்க ஹார்லி டேவிட்சன் பெரிதும் உழைத்துள்ளது. புதிய Sportster S-ன் மோட்டார், சேஸின் மையப் பகுதியாக மோட்டார் சைக்கிளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள லைட் வெயிட் மெட்டீரியல்கள் எஞ்சினின் குறிப்பிட்ட சக்திக்கு தேவையான மதிப்பை அடைவதை சாத்தியமாக்குகிறது.

ஃபுல் 11.8 லிட்டர் டேங்க்குடன் இந்த ஸ்போர்ட்ஸ்டர் எஸ் 228 கிலோ எடை கொண்டது. தோற்றத்தை பொறுத்த வரை, ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் அதன் ஹை-மவுண்ட் எக்ஸாஸ்ட் பைப்ஸ், முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் அகலமான 5-ஸ்போக் காஸ்ட் அலுமினியம் 17-இன்ச் வீல்ஸ் மற்றும் முன்பக்கத்தில் 16-இன்ச் வீல்ஸ் ஆகியவற்றுடன் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இந்த பைக் முன்பக்கத்தில் ஒரு காப்ஸ்யூல் வடிவ ஹெட்லைட்டை கொண்டுள்ளது.



4.0 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீனுடன் வரும் இந்த பைக்கில் ஸ்மார்ட் ஃபோனை ப்ளூடூத் மூலம் இணைக்க முடியும் மற்றும் நேவிகேஷன் வசதியையும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இது இது ஆல் LED லைட்டிங், பயண கட்டுப்பாடு மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் பெற்றுள்ளது.

ALSO READ |  எலக்ட்ரிக் வாகனங்கள் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை - ஆய்வு முடிவுகள்!

இந்த பைக்கில் ரோட், ஸ்போர்ட்ஸ், ரெயின் மற்றும் கஸ்டம் உள்ளிட்ட 4 சவாரி மோட்கள் உள்ளன. இது கார்னிங் என்ஹேன்ஸ்டு ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (C-ABS) கொண்டுள்ளது. விவிட் பிளாக், மிட்நைட் கிரிம்சன் மற்றும் ஸ்டோன் வாஷ் ஒயிட் பேர்ல் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் ஹார்லி நிறுவனம் இந்த புதிய பைக்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. புக்கிங் செய்துள்ளவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் Sportster S பைக் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Automobile, Bike

அடுத்த செய்தி