Home /News /automobile /

இந்த ஆண்டில் 8 புதிய மாடல் பைக்குகளை வெளியிடும் ஹார்லி டேவிட்சன்

இந்த ஆண்டில் 8 புதிய மாடல் பைக்குகளை வெளியிடும் ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன்

Harley-Davidson : ஹார்லி டேவிட்சன் பைக்குகளை புதிதாக வாங்குபவர்களுக்கு ஏதுவாக, லோ ரைடர் எஸ் மற்றும் எஸ்டி ஆகிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

நம்மூரில் ஹோண்டா, டிவிஎஸ், சுசுகி, யமஹா, பஜாஜ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பைக்குகளை தயாரித்து வந்தாலும், அவை எல்லாமே பெரும்பாலும் சாதாரண பயணங்களுக்கு உகந்த லோ-எண்ட் பைக் வகைகள் மட்டுமே.

ஆனால், அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட ஹார்லி டேவிட்சன் நிறுவனம், நல்ல ஸ்டைலான, சொகுசு வசதிகள் நிறைந்த ஹை-எண்ட் பைக்குகளை அறிமுகம் செய்வது வழக்கம். குறிப்பாக, இந்நிறுவன பைக்குகளின் என்ஜின் திறன் என்பது கார்களுக்கு சமமாக இருக்கும். பார்க்குபோது ஒரு ராயல் லுக் இருக்கும். அந்த வகையில், 2022ஆம் ஆண்டில் புதிய வாகனங்களை வெளியிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 புதிய மாடல்களை வெளியிட ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில் ஏழு வாகனங்கள் இரண்டு சக்கரங்களைக் கொண்ட பைக் வகை ஆகும். ஒரு வாகனம் மூன்று சக்கரங்களைக் கொண்ட டிரைக் வகை ஆகும். ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பைக்குகளில் சற்று மாறுதல்களை செய்து அல்லது அவற்றின் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் இந்த புதிய வாகனங்கள் வெளியிடப்படுகின்றன. புதிய வரவில் லோ ரைடர் எஸ், லோ ரைடர் எஸ்டி, ஸ்ட்ரீட் கிளைடு எஸ்டி, ரோடு கிளைடு எஸ்டி, சிவிஓ ஸ்ட்ரீட் கிளைடு, சிவிஓ ரோடு கிளைடு, சிவிஓ ரோடு கிளைடு லிமிடெட் மற்றும் சிவிஓ டிரை கிளைடு என வாகனங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க :  3 புதிய எஸ்யுவிக்களை அறிமுகப்படுத்தும் ஜீப் இந்தியா...!

ஹார்லி டேவிட்சன் பைக்குகளை புதிதாக வாங்குபவர்களுக்கு ஏதுவாக, லோ ரைடர் எஸ் மற்றும் எஸ்டி ஆகிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இது மில்வாக்கி8 117 என்ஜின் ரகத்தை கொண்டது. சுமார் 1,920 சிசி திறன் கொண்டதாகவும் உள்ளது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யும் அனைத்து புதிய வாகனங்களிலும் மில்வாக்கி 8 117 இன்ஜின் பொருத்தப்படுகிறது.



லோ ரைடர் மாடலில் உள்ள எஸ்டி டிரிம் பைக்குகளில் பெரிய முகப்பு, ஹையர் ரியர் சஸ்பன்ஷன், ஹையர் ஹாண்டில்பார் போன்ற வசதிகள் இருக்கின்றன. எஸ் டிரிம் வகை பைக்குகளில் சிறிய ஹெட்லை கவுல், லோயர் ரைடு உயரம் ஆகிய வசதிகள் உள்ளன. 2022ஆம் ஆண்டில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் லோயர் ரைடு பைக்குகளில் உள்ள சஸ்பென்சன் கிட் வகைகளில் 43 எம்எம் கொண்ட யுஎஸ்டி போர்க் அமைந்துள்ளது.

மேலும் படிக்க :  அட்டகாசமான தள்ளுபடிகளை வழங்கும் ஹோண்டா நிறுவனம்!

ஸ்ட்ரீட் கிளைடு எஸ்டி மற்றும் ரோடு கிளைடு எஸ்டி வகை பைக்குகளில் மேம்படுத்தப்பட்ட ரிஃப்லக்ஸ் லிங்க்டு பிரேக் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன. குறிப்பாக, பைக்குகளில் அதிநவீன ஜிஎடிஎஸ் பொழுதுபோக்கு வசதிகள் முழு ஸ்க்ரீன் வசதியுடன் இடம்பெற்றுள்ளன. மேலும், எல்ஈடி ஹெட்லைட் அமைக்கப்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Bike, Bike Riders

அடுத்த செய்தி