Home /News /automobile /

சர்வதேச சந்தையில் புதிய நைட்ஸ்டர் பைக்கை அறிமுகப்படுத்திய ஹார்லி டேவிட்சன்.. இந்தியாவில் எப்போது?

சர்வதேச சந்தையில் புதிய நைட்ஸ்டர் பைக்கை அறிமுகப்படுத்திய ஹார்லி டேவிட்சன்.. இந்தியாவில் எப்போது?

ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன்

சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டாக திகழும் ஹார்லி டேவிட்சன் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ்டர் பைக்கான 2022 ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் (Harley-Davidson Nightster) மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டாக திகழும் ஹார்லி டேவிட்சன் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ்டர் பைக்கான 2022 ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் (Harley-Davidson Nightster) மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் இது பற்றி கூறுகையில், 2022 Harley-Davidson Nightster எங்கள் ஸ்போர்ட்ஸ்டர் மோட்டார் சைக்கிள் பிரிவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் என கூறி உள்ளது. இந்த புதிய பைக் வெகு விரைவில் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மோட்டார் சைக்கிள் கிளாசிக் ஸ்போர்ட்ஸ்டர் மாடல் சில்ஹவுட்டுடன் புதிய ரெவல்யூஷன் மேக்ஸ் 975டி பவர்டிரெய்ன் மற்றும் எலெக்ட்ரானிக் ரைடர் எய்ட்ஸ் மற்றும் அம்சங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2022 ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக்கானது பிளாக், ரெட் மற்றும் கிரே ஆகிய 3 பாடி பெயிண்ட் ஆப்ஷன்களை பெறுகிறது. நைட்ஸ்டர் டிசைனின் மையப்பகுதியில், 60 டிகிரி வி-ட்வின் & 975சிசி லிக்விட்-கூல்டு நியூ ரெவல்யூஷன் மேக்ஸ் 985T இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 7500ஆர்பிஎம்-மில் 88.7பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கில் ரோட், ரெயின் மற்றும் ஸ்போர்ட் ஆகிய 3ரைட் மோட்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு ரைட் மோடும் என்ஜின் பிரேக்கிங், பவர், ஏபிஎஸ் மற்றும் டிசிஎஸ் அமைப்புகளின் குறிப்பிட்ட கலவையை கொண்டிருப்பதால் ஓட்டுபவர் தனது தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்ய முடியும். பவர்டிரெய்ன் பளபளப்பான பிளாக் இன்ஸெர்ட்ஸ்களுடன் ஒரு கடினமான மெட்டாலிக் சார்கோல் பவுடர் கோட் பினிஷிங்க்கை பெறுகிறது.

இந்த பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷன்ஸ் 41 மிமீ ஷோவா டூயல் பெண்டிங் வால்வ் கன்வென்ஷனல் ஃபோர்க்ஸ் உதவியுடன் செயல்படும் அதே சமயம் பின்புற சஸ்பென்ஷனில் டூயல் அவுட்போர்டு எமல்ஷன்-டெக்னாலஜி ஷாக் அப்சார்பர்ஸ் மற்றும் காயில் ஸ்பிரிங்ஸ் மற்றும் ப்ரீ-லோட் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கான த்ரெட்டு காலர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரை இந்த 2022 ஹார்லி-டேவிட்சன் நைட்ஸ்டர் பைக்கானது ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ட்ராக்-டார்க் ஸ்லிப் கன்ட்ரோல் சிஸ்டம் (drag-torque slip control system) உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. தவிர இந்த பைக் ஹேண்டில்பார் ரைசரில் பொருத்தப்பட்ட எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் எல்இடி விளக்குகளுடன் கூடிய சுற்று 4.0-இன்ச் விட்டம் கொண்ட அனலாக் ஸ்பீடோ மீட்டரையும் கொண்டுள்ளது.

Also read... எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் கிடைக்க வாய்ப்பு!

ஹைட்ராலிக் வால்வ் லேஷ் அட்ஜஸ்ட்மென்ட் அமைதியான செயல்பாட்டை உறுதி செய்து, சிக்கலான சேவை நடைமுறைகளின் தேவையை நீக்குவதாக ஹார்லி-டேவிட்சன் கூறி உள்ளது. ரைடர் வசதியை அதிகரிக்கவும் வாகனத்தின் ஆயுளை மேம்படுத்த இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள இன்டர்னல் பேலன்சர்கள் என்ஜின் அதிர்வை குறைப்பதன் மூலம் உதவுகின்றன. இந்த பேலன்சர்கள் போதுமான அதிர்வுகளை தக்க வைத்து கொள்ளும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் புதிய நைட்ஸ்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ள Harley-Davidson, எப்போது என்ற தகவலை இன்னும் வெளியிடவில்லை.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி