இந்தியாவில் விற்பனை, தயாரிப்பை நிறுத்தும் ஹார்லிடேவிட்சன்

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதன் மோட்டார்பைக் விற்பனை மற்றும் தயாரிப்பு பணிகளை நிறுத்தியுள்ளது.

இந்தியாவில் விற்பனை, தயாரிப்பை நிறுத்தும் ஹார்லிடேவிட்சன்
ஹார்லி டேவிட்சன்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 4:18 PM IST
  • Share this:
உலகளவில் பிரபலமான அமெரிக்க மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன், அதன் தொழிற்சாலையை ஹரியானாவில் அமைத்து, இருசக்கர வாகனங்களை தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்தநிலையில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், செலவுகளை குறைக்கும் நோக்கத்திலும், இந்தியாவில் பைக் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஹார்லி டேவிட்சனில் பணியாற்றும் 70 பணியாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய சந்தையிலிருந்து வெளியேறினாலும், டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுக்கு சர்வீஸ் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்கு 570 கோடி ரூபாய் வரை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் செலவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விற்பனை குறைந்த சந்தைகளை விட்டு வெளியேற, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு விதிக்கப்பட்டு வந்த அதிகபட்ச இறக்குமதி வரியும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்லி மோட்டார்சைக்கிள்களுக்கு இந்தியா அதிக இறக்குமதி வரி விதிப்பதாக சாடியிருந்தார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading