ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

தூள் கிளப்பும் Harley-Davidson பைக்குகள் - விற்பனை அதிகரிக்க காரணம் இதுவா.?

தூள் கிளப்பும் Harley-Davidson பைக்குகள் - விற்பனை அதிகரிக்க காரணம் இதுவா.?

ஹார்லி - டேவிட்சன் நிறுவனம்

ஹார்லி - டேவிட்சன் நிறுவனம்

Harley-Davidson Bikes | இந்தியாவில் உள்ள பைக் லவ்வர்கள் பலருக்கும் பிடித்த சூப்பர் பைக் பிராண்டான ஹார்லி டேவிட்சன் 2021 முதல் 2022 வரையிலான நிதியாண்டியில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பைக் என்ற பெருமையை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் பெரும்பாலும் நடுத்தர வர்த்தகத்தினர் பட்ஜெட் பிரண்ட்லி பைக்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினாலும், ராயல் என்பீல்டு, கவாஸாகி, சுஸுகி, ஹோண்டா, ஹார்லி டேவிட்சன் போன்ற பிராண்டுகளில் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பைக்குகளை போட்டி போட்டு வாங்கும் இளைஞர்கள் பட்டாளமும் இங்கு உண்டு. 1000சிசி மற்றும் அதற்குமேல் செயல்திறன் கொண்ட இந்த பைக்குகளை சூப்பர் பைக்குகள் என்பார்கள். நீண்ட நெடுத்தூர பயணத்திற்கு இந்த வகை பைக்குகள் சிறந்தவை.

இந்நிலையில் கடந்த 2021-22 நிதியாண்டிற்கான விற்பனை அறிக்கையின் படி ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விற்பனை இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது. SIAM நிறுவனத்தின் தரவுகளின் படி, இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் 601 யூனிட் மோட்டர் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் 531 யூனிட்கள் 1,000-cc மற்றும் அதற்கு மேற்பட்ட இருசக்கர வாகனப் பிரிவில் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் 37 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஹார்லி டேவிட்சன் 206 யூனிட் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் பிரீமியம் மோட்டார் சைக்கிள்களில் முதலிடத்தை மீண்டும் பெற்றுள்ள ஹார்லி டேவிட்சன் நிறுவனம், 2020ம் ஆண்டு பெரிதாக விற்பனை இல்லாததால் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தது. இதற்காக தொழிற்சாலையையும், டீலர்ஷிப் ஷோரூம்களையும் மூடிய ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் நேரடி விற்பனையை முற்றிலும் தவிர்த்துவிட்டு, ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி சேர்ந்து மறைமுக விற்பனையை துவங்கியது. தற்போது இந்தியா முழுவதும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் அனைத்தும் ஹீரோவின் டீலர்ஷிப்களின் கீழ் குறிப்பிட்ட ஷோரூம்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் விற்பனையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

மற்ற பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஹார்லி 336 யூனிட்களை விற்பனை செய்து ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் விற்பனையை முந்தியுள்ளது. 1,000-சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் பிரிவில் கவாஸாகி 283 பைக்குகளையும், சுஸுகி 233 பைக்குகளையும், ஹோண்டா 71 பைக்குகளையும் மட்டுமே விற்பனை செய்துள்ளன.

Also Read : பட்ஜெட் விலையில், அதிக மைலேஜ் தரும் பைக்குகள் பட்டியல்..

அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பான் அமெரிக்கா 1250 அட்வென்ச்சர் டூரர் மற்றும் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் க்ரூஸர் ஆகிய பைக்குகளின் பெரும்பாலான விற்பனை, அந்நிறுவனத்திற்கான புதுத்தளமாகவும், புரட்சியாகவும் மாறியுள்ளது.

Also Read : 2022 KTM 390 Adventure VS BMW G 310 GS - இவற்றில் எது சிறந்த பைக்.?

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் முந்தைய விற்பனையின் பெரும்பகுதி ஸ்ட்ரீட் 750, அயர்ன் 883 மற்றும் 48 போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை அடிப்படையாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Automobile, Bike