Harley Davidson : புதிய பிராண்டை அறிமுகம் செய்யும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் - அதிரடி அறிவிப்பு

ஹார்லி டேவிட்சன்

ஜூலை மாதம் 8ம் தேதி LiveWire பிராண்ட் அறிமுகம் செய்யப்படும் என்று ஹார்லி டேவிட்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  • Share this:
மிக உயர்ந்த இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன், எலக்டிரிக் ரக இருசக்கர வாகனங்கள் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 'LiveWire' என்ற எலக்டிரிக் ரக வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம், தற்போது அந்தப் பெயரை தனி பிராண்டாக மாற்ற முடிவு செய்துள்ளது.

ஜூலை மாதம் 8ம் தேதி LiveWire பிராண்ட் அறிமுகம் செய்யப்படும் என்று ஹார்லி டேவிட்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூலை 9ம் தேதி நடைபெறும் உலக மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் லைவ் வையர் பிராண்ட் இருசக்கர வாகனம் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

நகர்புற வாடிக்கையாளர்களை மட்டும் தற்போது குறிவைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஹார்லி டேவிட்சன் நிறுவனம், லைவ் வையர் நிறுவனத்தின் தலைமையகம் சிலிகான் வேலி (Silicon Valley) மற்றும் மில்வாக்கி (Milwaukee) ஆகிய இரண்டு இடங்களில் இருந்து செயல்படும் எனக் கூறியுள்ளது.

ALSO READ : இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்றுள்ள சுசுகி ஹயாபூசா... விலை எவ்வளவு தெரியுமா?

நகர்புற இருசக்கர வாகன ஓட்டுநர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் லைவ் வையர் பிராண்டின் வாகனங்கள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. லைவ் வையர் பிராண்டின் முதல் ஷோரூம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் அமைக்கப்படவுள்ளது. ஹார்லிடேவிட்சன் நிறுவனத்தின் டீலர்களுடன் இணைந்து லைவ் வையர் பிராண்ட் பிரபலப்படுத்தப்பட்டு, வாகன விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ : எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்க போறீர்களா? இதோ சிறந்த ஸ்கூட்டர்கள் விவரம்

தரமான பிராண்டாக Live Wire சந்தையில் உருவாகுவதற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் அடிப்படை கட்டமைப்புகளை உபயோகப்படுத்திக்கொள்வதுடன், பொறியியல் நிபுணர்கள் உள்ளிட்டோரையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. கூடுதலான முதலீடுகளை ஹார்லி டேவிட்சன் மற்றும் லைவ் வையர் பிராண்டுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தொழில்நுட்ப கட்டமைப்பு ரீதியாகவும் லைவ் வையர் பிராண்டை மேம்படுத்த உதவி செய்ய உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது அனைத்து உற்பத்தியை கடந்த ஆண்டுடன் நிறுத்திக்கொண்டது. மேலும், தங்களது நிறுவன பைக்குகளை ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து விற்பனை மற்றும் சர்வீஸ் வழங்கி வருகிறது. தற்போது லைவ் வையர் என்ற புதிய பிராண்டை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதால், அந்த பிராண்டும் ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுமா? அல்லது தனியாக களமிறக்கப்படுமா? என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

ALSO READ :  ஆக்டிவா 6ஜி-யை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ள ஹோண்டா!

எனினும், லைவ் வையர் எலக்டிரிக் பைக்குகள் இந்திய இருசக்கர வாகன சந்தைக்கு வருவதற்கு காலதாமதமாகும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட லைவ் வையர் பைக்கானது, 15.5 kWh பேட்டரி திறன் கொண்டது. திறன் வெளியீடு 104.6 bhp ஆகவும் டார்க் வெளியீடு 116 Nm ஆகவும் உள்ளது. 3.5 விநாடிகளிலே மூன்று இலக்க வேகத்தை எட்டும் லைவ்வயர் பைக், ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 235 கிமீ வரையில் பயணிக்க முடியும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published: