• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Tesla: டெஸ்லாவை இழுக்க குஜராத் மும்முரம் - 1000 ஏக்கர் வழங்க தயார் என அறிவிப்பு!

Tesla: டெஸ்லாவை இழுக்க குஜராத் மும்முரம் - 1000 ஏக்கர் வழங்க தயார் என அறிவிப்பு!

டெஸ்லா

டெஸ்லா

உலகின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவும் இந்திய கார் மார்க்கெட்டில் களமிறங்குகிறது.

  • Share this:
மின்சார கார்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெஸ்லாவுக்கு 1000 ஏக்கர் நிலம் வழங்க தயாராக இருப்பதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் மின்சார கார் உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றன. இந்திய அரசும் மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. இதனால், உலகில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார கார் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தொழிற்சாலை நிறுவதற்கான கட்டமைப்பு, கார் சார்ஜிங் ஸ்டேஷன் ஆகியவை அமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. உடனடியாக அனைத்து பகுதிகளிலும் இந்த கட்டமைப்பை நிறுவ முடியாத நிலையில் நகரப் பகுதிகளை மட்டுமே மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் குறி வைத்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தவகையில் உலகின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவும் இந்திய கார் மார்க்கெட்டில் களமிறங்குகிறது. ஏற்கனவே மும்பை வோர்லி பகுதியில் டெஸ்லாவின் தற்காலிக அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களுரு ஆகிய நகரங்களில் முதலில் விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ள டெஸ்லா, கார் தயாரிப்பு தொழிற்சாலையை எங்கு அமைப்பது? என இன்னும் முடிவெடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நாட்டில் இருக்கும் பல்வேறு மாநிலங்களும் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தங்கள் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

அந்த மாநிலங்களின் வரிசையில் குஜராத்தும் இணைந்துள்ளது. டெஸ்லா நிறுவனம் கார் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க சுமார் 1000 ஏக்கர் நிலத்தை வழங்க தயாராக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு உள்ளேயும், வெளியேவும் நிலத்தை ஒதுக்க இருப்பதாக குஜராத் தெரிவித்துள்ளது. அரசின் அழைப்பை டெஸ்லா நிறுவனத்துக்கும்தெரியப்படுத்தி இருப்பதாக குஜராத் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் முதல் தொழிற்சாலை எங்கு அமைப்பது என்பது பற்றிய தெளிவான முடிவை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Also read... BMW G 310 R: புதுப்பிக்கப்பட்ட பெயிண்ட் விருப்பங்களுடன் அறிமுகமானது BMW G310 R பைக்!

முன்னதாக, கர்நாடக அரசு டெஸ்லா நிறுவனம் தங்கள் மாநிலத்தில் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க இருப்பதாக அறிவித்தது. இது குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, டெஸ்லா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், விரைவில் கர்நாடகாவில் டெஸ்லா மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமையும் எனக் கூறினார். அவரின் இந்த அறிவிப்புக்கு டெஸ்லா இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதனையும் கொடுக்கவில்லை. உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி என அனைத்துக்கும் ஏற்ற இடத்தை தேர்வு செய்வோம் என தெரிவித்துள்ள டெஸ்லா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட எந்த மாநிலங்களில் முதல் தொழிற்சாலையை அமைப்பது என பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே கூற முடியும் எனக் கூறியுள்ளது. எனினும், இந்தியாவில் டெஸ்லா கால் பதிப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: