எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சார்ஜர்களுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு!

பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவிகிதமாகவும் இதனுடன் செஸ் வரியும் இணைக்கப்பட்டு விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சார்ஜர்களுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 27, 2019, 8:47 PM IST
  • Share this:
எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான சார்ஜர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 18 சதவிகித ஜிஎஸ்டி வரியுடன் இருந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்கள் வரியும் 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், எலெக்ட்ரிக் பேருந்துகளை வாடகைக்கு எடுத்தால் அவற்றுக்கான ஜிஎஸ்டி வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் இப்புதிய வரிவிதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பெட்ரோல், டீசல் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவிகிதமாகவும் இதனுடன் செஸ் வரியும் இணைக்கப்பட்டு விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உபேர்..!
First published: July 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்