எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க வாய்ப்பு- ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை

’ஜிஎஸ்டி-யின் கீழ் வரிசெலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் புதிய வரிவிதிப்புக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது’.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க வாய்ப்பு- ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை
அனுராக் தாக்கூர் (Image :PTI)
  • News18
  • Last Updated: June 24, 2019, 5:14 PM IST
  • Share this:
எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி வருவதாக மக்களவை எம்.பி-யும் நிதித்துறை இணை அமைச்சருமான அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

மக்களவையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரிச்சலுகை குறித்தான பாஜக உறுப்பினர் வருண் காந்தியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளித்தார். அனுராக் தாக்கூர் கூறுகையில், “ஜிஎஸ்டி கவுன்சில் முன்னர் இந்த விவகாரம் முன் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச்சலுகை மீதான ஆலோசனை நிலுவையில் உள்ளது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ஜிஎஸ்டி-யின் கீழ் வரிசெலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் புதிய வரிவிதிப்புக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் அறிவிக்கும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வரி வருமானம் 8.5 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது” என்றார்.


மேலும் பார்க்க: இந்தியாவில் கார் விற்பனை கடும் சரிவு- கடந்த ஆண்டைவிட 26% வீழ்ச்சி!
First published: June 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்