பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவது குறித்த கவலை உலகையே ஆட்கொண்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, அந்த வகை வாகனங்கள் பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது.
இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த உலகும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும்போது, குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே அவை செல்கின்றன என்ற சூழலிலும், தற்போது வரை சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெரிய அளவுக்கு அமைக்கப்படவில்லை என்பதாலும், அந்த வாகனங்களை வாங்குவதில் சிலருக்கு தயக்கம் இருக்கிறது.
ஆனால், ஹைதராபாதில் செயல்பட்டு வரும் கிராவ்டன் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் இந்தக் கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஆம், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 4,000 கி.மீ. பயணம் செய்யும் வாகனத்தை இந்த நிறுவனம் அறிமுகம் செய்கிறது. மைலேஜ் தூரத்தை வெறும் வார்த்தையால் சொல்லிக் காட்டாமல், அதை செயல்படுத்திக் காட்டியுள்ளது அந்த நிறுவனம்.
கன்னியாகுமரியில் இருந்து லடாக்கில் உள்ள கர்துங் லா என்ற பகுதி வரையிலான 4,011 கி.மீ. பயணத்தை கிராவ்டன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பைக் நிறைவு செய்துள்ளது. கே-டு-கே (கன்னியாகுமரி - கர்துங் லா) என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தப் பயணம் 164 மணி நேரம், 30 நிமிடங்களில் நிறைவு பெற்றுள்ளது.
Also Read : உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்..
ஒரே சார்ஜில் மிக அதிக தொலைவுக்கு சென்றது உலக சாதனையாக கருதப்படுகிறது. இது, ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி இந்தப் பயணம் தொடங்கப்பட்டது. 164 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களில் (6.5 நாட்கள்) தனது இலக்கை இந்த பைக் எட்டியது. பயணம் 2021 செப்டம்பர் 20ஆம் தேதி நிறைவுபெற்றது.

Gravton Quanta EV
ஸ்வேப்பபிள் பேட்டரி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, எந்தவித சார்ஜும் செய்யாமலேயே இந்த பயண தூரம் கடக்கப்பட்டது என்று கிராவ்டன் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read : எலெக்ட்ரிக் பைக்குகளை தவணை முறையில் எளிதாக வாங்கலாம் - Hero Electric நிறுவனத்தின் அட்டகாச திட்டம்..
இதுகுறித்து, கிராவ்டன் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான பரஷுராம் பகா கூறுகையில், “சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களின் செயல்திறன் குறித்த கேள்வி காரணமாக கடந்த ஓராண்டாகவே எலெக்ட்ரிக் வாகன சந்தை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது.
இதை எதிர்கொண்டு, பலமான நம்பிக்கையை விதைக்கும் வகையிலும், பெட்ரோல் வாகனங்களை விட இதன் செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையிலும் இந்தப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டோம்’’ என்று தெரிவித்தார்.
Also Read : காரின் உட்பகுதி டாய்லெட் சீட்டை விட அசுத்தமானது - ஷாக்கிங் ரிப்போர்ட்!
இதற்கிடையே, ஹைதராபாத் அருகே உள்ள செர்லபள்ளி என்ற இடத்தில் இந்நிறுவனத்தின் மற்றொரு உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மாபெரும் உற்பத்தி ஆலையை நிறுவ திட்டமிட்டிருப்பதாக கிராவ்டன் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.