டோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்!

டோல்கேட்களில் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்!
Fastag
  • Share this:
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் லாரிகளுக்கு பாஸ்டேக் சுங்கக்கட்டண நடைமுறையை அமல்படுத்துவது ஜனவரி 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

தற்போது வரை சுமார் 25 சதவீதத்தினர், இந்த அட்டையை இன்னும் வாங்கவில்லை என்பதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயத்தை தடுக்க பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இதன்படி வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படவேண்டும். வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் தானாக கழியும் வகையில் நாடெங்கிலும் உள்ள சுங்கச்சாவடிகள் கணினியால் இணைக்கப்பட்டுள்ளன.

பாஸ்டேக் ஸ்டிக்கரை ஆக்டிவேட் செய்து தர 22 முக்கிய வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஸ்டிக்கரை வாங்கலாம். அதற்காக 100 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். வங்கிக்கு வங்கி கட்டணம் சற்றே மாறுபடும். அத்துடன் திரும்பப் பெறக்கூடிய 100 அல்லது 200 ரூபாய் டெபாசிட் தொகையை செலுத்தவேண்டும். அதன்பின்னர் தொடர்ந்து நேரிலோ, ஆன்லைனிலோ ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் சில வங்கிகள் ரீசார்ஜை 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் தருகின்றன.

ஆன்லைனில் பாஸ்டேக் பெறவிரும்புவோர் My FASTag செயலியை கூகுள்பிளே ஸ்டோரிலும், ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோரிலும் டவுன்லோடு செய்யலாம். பின்னர் அதை விரும்பிய வங்கிக் கணக்குடனோ இணைத்துக் கொள்ளலாம்.இந்த நிலையில், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு பாஸ்டேக் சுங்கக்கட்டண நடைமுறையை அமல்படுத்துவது ஜனவரி 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
First published: December 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்