கார்களில் இரண்டு Airbags கட்டாயம்.. புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு.. முழு விவரம் இதோ..

மாதிரி படம்

மத்திய அரசின் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஒவ்வொரு காரின் விலையும் ரூ.5000 முதல் ரூ.8000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அனைத்து வகை கார்களிலும் இரண்டு ஏர்பேக்குகள் (Airbags) கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்ற உள்ளது.

இந்தியாவில் கார்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாருதி ஜென் உள்ளிட்ட செகணன்ட் கார்கள் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதால், தொலைதூர பயணத்துக்கு உதவும் என நடுத்தர மக்கள் அந்தவகை கார்களை வாங்கத் தொடங்கிவிட்டனர். அதேவேளையில், நாடு முழுவதும் சாலை விபத்துகளின் மூலம் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சத்து 50,000 பேர் சாலை விபத்துகளால் மட்டும் உயிரிழப்பதாகவும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

மோசமான சாலை வசதி விபத்துகளுக்கு காரணமாக கூறப்பட்டாலும், வாகனங்களில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடும் முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, வாகனங்களின் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மேலும் கடுமையாக திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை கார்களிலும் ஏர்பேக்குகள் கட்டயமாக இரண்டு இடம்பெற்றிருக்க வேண்டும் என சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது. 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் கார் ஓட்டுநருக்கு கட்டாயமாக ஏர்பேக் பாதுகாப்பு அனைத்து வகை கார்களிலும் இருக்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. 

அதில் திருத்தம் மேற்கொண்டு, காரின் முன்பக்கத்தில் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருக்கும் பயணியின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அனைத்து வகை கார்களிலும் இரண்டு ஏர்பேக்குகள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என சட்டம் இயற்ற உள்ளது. எனினும், இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வராது என்றும், கார் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட  காலவகாசம் கொடுக்கப்பட்டு, ஓராண்டு பின்னர் தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also read... சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 78 iPhone திருட்டு - இரண்டு Amazon ஊழியர்கள் கைது!

ஆட்டோமொபைல் துறையின் விதிமுறைகளின்படி, அனைத்து வகை கார்களிலும் முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிக்கு ஏர்பேக்குகள் வைக்க வேண்டும் என்ற விதி இல்லை. இதனால், உயர் ரக கார்களுக்கு மட்டும் ஏர்பேக் வசதிகளை கொடுக்கும் கார் நிறுவனங்கள், நடுத்தர மற்றும் மலிவு விலை கார்களுக்கு முன்பக்க பயணிக்கான ஏர்பேக் வசதியை கொடுப்பதில்லை. மேலும், வாடிக்கையாளரின் விருப்பத்தின்பேரில் அந்த வசதியை செய்து கொடுக்கின்றனர். ஏர்பேக்குகள் வைப்பதற்கு கூடுதலாக பணம் வசூலிப்பதால், விலையை கருத்தில் கொண்டு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏர்பேக் பாதுகாப்பு வசதியை நிராகரித்து விடுகின்றனர். 

மாருதி சுசூகி நிறுவனத்தின் Alto, S-Presso, Celerio, Wagon R ஆகிய மாடல் கார்களில் ஓட்டுநருக்கு மட்டுமே ஏர்பேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் அமர்ந்திருக்கும் பயணிக்கான ஏர்பேக் கொடுக்கப்படவில்லை. இதேபோல் Renault Kwid, Hyundai Santro உள்ளிட்ட மற்ற நிறுவனங்களில் மலிவு விலை மற்றும் நடுத்தர கார்களிலும் இந்த பாதுகாப்பு வசதி கொடுக்கப்படுவதில்லை. இதனிடையே, மத்திய அரசின் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஒவ்வொரு காரின் விலையும் ரூ.5000 முதல் ரூ.8000 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: