காரின் இரண்டு இருக்கைகளிலும் ஏர்பேக்குகள் பொருத்தும் விவகாரம் : டிச.31 வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

காரின் இரண்டு இருக்கைகளிலும் ஏர்பேக்குகள்

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, காரின் முன்பக்கத்தில் உள்ள இரண்டு இருக்கைகளிலும், ஏர் பேக்குகளை உறுதி செய்வதற்கான அவகாசத்தை, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  புதிய கார்களில் முன்பகுதியில் உள்ள இரண்டு இருக்கைகளிலும், ஏர் பேக் கட்டாயம் என்பதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

  பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தற்போது விற்பனையில் உள்ள கார்களின் முன் பகுதியில், ஓட்டுனருக்கான இருக்கையில் மட்டுமின்றி, அவருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையிலும், ஏர் பேக்குகள் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியது.

  இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, காரின் முன்பக்கத்தில் உள்ள இரண்டு இருக்கைகளிலும், ஏர் பேக்குகளை உறுதி செய்வதற்கான அவகாசத்தை, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: