ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பயணிகள் கார்களுக்கான 6 ஏர்பேக் பாதுகாப்பு விதியை ஓராண்டுக்கு ஒத்தி வைத்த மத்திய அரசு - காரணம் என்ன?

பயணிகள் கார்களுக்கான 6 ஏர்பேக் பாதுகாப்பு விதியை ஓராண்டுக்கு ஒத்தி வைத்த மத்திய அரசு - காரணம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

தற்போது 6 ஏர்பேக் பாதுகாப்பு விதியை அமல்படுத்துவதை ஓராண்டு வரை ஒத்தி வைத்துள்ளது மத்திய அரசு. இந்த கட்டாய விதி அடுத்த ஆண்டு (2023) அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பயணிகள் கார்களில் 6 ஏர்பேக்ஸ்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. நாட்டில் பயணிகள் கார்களுக்கான ஆறு ஏர்பேக் பாதுகாப்பு விதி அமல்படுத்துவதை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறி இருக்கிறார்.

  கார்களில் பயணிக்கும் மக்களின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக கார்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்ஸ்கள் இருக்க வேண்டும் என்ற புதிய கட்டாய விதியை முன்னதாக அக்டோபர் 1, 2022 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது 6 ஏர்பேக் பாதுகாப்பு விதியை அமல்படுத்துவதை ஓராண்டு வரை ஒத்தி வைத்துள்ளது மத்திய அரசு. இந்த கட்டாய விதி அடுத்த ஆண்டு (2023) அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்.

  விபத்துகளின் போது டிரைவருக்கும் வாகனத்தின் டேஷ்போர்டிற்கும் இடையில் ஏர்பேக் குறுக்கிட்டு கடுமையான காயங்கள் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தான் டிரைவர் உட்பட பிற பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கார்களில் 6 ஏர்பேக்ஸ்கள் இருக்க வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. சமீபத்தில் கூட டாடா சன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி காரி விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாடு ழுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்த போதும் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

  இதனிடையே சமீபத்தில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் 6-airbag safety rule தொடர்பான அறிவிப்பை ஷேர் செய்து இருக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. குறிப்பிட்ட ட்விட்டர் போஸ்ட்டில் "ஆட்டோமொபைல் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலி தடைகள் மற்றும் மேக்ரோஎகனாமிக் சூழ்நிலையில் அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பயணிகள் கார்களில் (M-1 கேட்டக்ரி) குறைந்தபட்சம் 6 ஏர்பேக்ஸ்களை கட்டாயமாக்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அதாவது அக்டோபர் 01, 2023 முதல் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்து இருக்கிறார்.

  விலை மற்றும் வேரியன்ட்களை பொருட்படுத்தாமல் மோட்டார் வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டில் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளார்.

  முன்னதாக கடந்த ஜனவரி 14, 2022 அன்று, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அக்டோபர் 1, 2022-க்கு பிறகு தயாரிக்கப்படும் M1 கேட்டக்ரியில் உள்ள அனைத்து வாகனங்களிலும் 6 ஏர்பேக்ஸ்கள் பொருத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வரைவு அறிவிப்பை வெளியிட்டது.

  Read more:உலகின் முதலாவது எலெக்ட்ரிக் விமானம் தனது பயணத்தை நிறைவு செய்தது!

  அதே போல சைரஸ் மிஸ்திரியின் மறைவிற்கு பின் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காரில் சீட் பெல்ட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், மேலும் காரில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் அதை அணிவது கட்டாயமாகும் என்று வலியுறுத்தி, வாகன உற்பத்தியாளர்கள் பின் இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் அலாரம் சிஸ்டமை அறிமுகப்படுத்துவது கட்டாயமாக்கபடும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Airbags, Car