வணிக பயன்பாட்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே மானியம் - மத்திய அரசு விளக்கம்

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக இந்தியாவில் தரப்படும் மானியம் சொந்த உபயோக வாகனங்களுக்குப் பொருந்தாது.

வணிக பயன்பாட்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே மானியம் - மத்திய அரசு விளக்கம்
மாதிரிப்படம். (Photo: AFP Relaxnews)
  • News18
  • Last Updated: July 21, 2019, 7:16 PM IST
  • Share this:
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க மானியம் அறிவித்த மத்திய அரசு, வணிக பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே மானியம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக இந்தியாவில் தரப்படும் மானியம் சொந்த உபயோக வாகனங்களுக்குப் பொருந்தாது. இதுகுறித்து மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொது நிறுவனங்கள் துறையின் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், “இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெருக வேண்டும் என அரசு விரும்புகிறது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவே பைக், கார், ட்ரக், லாரி, ரிக்‌ஷா என அனைத்தும் மின்சார வாகனங்களாக மாற வேண்டும் என நினைக்கிறோம். வணிக ரீதியிலான வாகனப் பயனாளர்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகன உபயோகத்தை அதிகப்படியாக முன்னெடுக்க அரசு முயற்சிக்கிறது.


மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வணிக ரீதியிலான பயன்பாடுகள் கொண்டிருந்தால் அவற்றிற்கு அரசு மானியம் வழங்கும். நமது எதிர்கால தலைமுறையினருக்காக புகை இல்லா தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்க எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இதுதான் எங்களது குறிக்கோள்” என்றார்.

மேலும் பார்க்க: வாகனங்களில் பக்கவாட்டுக் கண்ணாடிகளுக்குப் பதிலாக கேமிரா- புதிய முயற்சியில் ஹூண்டாய்
First published: July 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்