25 கி.மீ-க்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்...! எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் அரசு

வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலையில் பயணிக்கும் நூறு வாகனங்களின் 25 வாகனங்கள் இ-வாகனங்களுக்காக இருக்க வேண்டும்

Web Desk | news18
Updated: February 20, 2019, 1:44 PM IST
25 கி.மீ-க்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்...! எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் அரசு
சார்ஜிங் ஸ்டேஷன்
Web Desk | news18
Updated: February 20, 2019, 1:44 PM IST
நாடு முழுவதிலும் ஒவ்வொரு 25 கி.மீ தொலைவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு சார்ஜிங் ஸ்டேஷன்களைக் கட்டமைக்க உள்ளது. வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலையில் பயணிக்கும் நூறு வாகனங்களின் 25 வாகனங்கள் இ-வாகனங்களுக்காக இருக்க வேண்டும் என்பதே லட்சியம் என மத்திய நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன்களுக்காகப் புதிய சட்ட விதிமுறைகளும் மத்திய அரசின் சார்பாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், கனரக எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக நாட்டின் நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ தொலைவுக்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷனும் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

குடியிருப்பு நகர்ப்புறங்களில் 25 கி.மீ தொலைவுக்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் சாலையின் இரு புறங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: இந்தியா தாக்கினால் பதிலடி கொடுப்போம்... பாக். பிரதமர் இம்ரான் கான்
First published: February 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...