எலெக்ட்ரிக் வாகன விற்பனையை 6-7 மில்லியனாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

இந்தியாவிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பெருக்க மத்திய அரசு முயற்சி எடுக்கத் தொடங்கி உள்ளது.

Web Desk | news18
Updated: July 10, 2019, 4:05 PM IST
எலெக்ட்ரிக் வாகன விற்பனையை 6-7 மில்லியனாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!
மாதிரிப்படம் (Photo: Reuters)
Web Desk | news18
Updated: July 10, 2019, 4:05 PM IST
வருகிற 2020-ம் ஆண்டுக்குள் 6-7 மில்லியன் வரையில் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசிடம் எலெக்ட்ரிக் ரக வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சொல்லி தேசிய மின்சார வாகன மிஷன் திட்டக் குழு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. NEMMP 2020 திட்டம் என்பது தேசிய அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை பல நாடுகள் அதிகப்படியாகவே உபயோகப்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதேபோல், இந்தியாவிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பெருக்க மத்திய அரசு முயற்சி எடுக்கத் தொடங்கி உள்ளது.


இதுகுறித்து மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொது நிறுவனத்துறை அமைச்சர் அரவிந்த் சாவன் மாநிலங்களவையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “NEMMP 2020 திட்டத்தின் அடிப்படையில் வருகிற 2020-ம் ஆண்டுக்குள் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க உள்ளோம். எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெற சார்ஜிங் நிலையங்களையும் விரைந்து உருவாக்க வேண்டும். இதற்கான முயற்சி NEMMP 2020 திட்டத்தில் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: இன்றைய இளைஞர்கள் சொந்த வாகனம் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை- ஆய்வு
First published: July 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...