முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / முக்கிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கு மானியம் நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு!

முக்கிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கு மானியம் நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் மானியம் திடீர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் விற்பனையாகும் முக்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கு டூ-வீலர்களுக்கான அரசு அளிக்கும் மானியம் நிறுத்தம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் அரசு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை ஊக்குவிற்பதற்காக ஃபேம் என்னும் மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அந்த வகையில் மானியம் பெரும் நிறுவனங்கள் உள்ளூர் உதிரிப்பாகங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். அதை மீறுபவர்களுக்கு மானியம் மறுக்கப்படும்.

அரசின் ஃபேம் திட்டம் மின் வாகன பயன்பாட்டை மட்டுமல்ல உள்ளூர் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது விதிமுறைகளை மீறியதாக வாகனங்கள் உற்பத்தியில் முக்கியமாக திகழும் ஹீரோ எலெக்ட்ரிக், ஒகினாவா நிறுவனங்களுக்கு மானியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Also Read : இதுவரை இல்லாத அதிகப்பட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம்

ஏற்கனவே கிரீவ்ஸ் காட்டனின் ஆம்பியர், ரிவோல்ட், ஒகயா மற்றும் ஜிதேந்திரா இவி ஆகிய நிறுவனங்களை மத்திய அரசு சோதனை வளையத்திற்குள் கொண்டு வந்தநிலையில் தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஒகினாவா நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஆகையால், இவர்களின் தயாரிப்புகள் மானிய திட்டத்தின் கீழ் விற்பனைக்குக் கிடைப்பதற்குத் தடை ஏற்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் மின் வாகன தயாரிப்புகளில் உள்ளூர் உதிரிப்பாகங்களே பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிரூபிக்க வேண்டும். இதை நிரூபித்த பிறகே அவர்களால் அரசின் மானிய திட்டத்தின்கீழ் தயாரிப்புகளை விற்பனைச் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

First published:

Tags: Central government, Electric bike, Subsidy