ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட தகவல்களை ₹65 கோடிக்கு தனியாருக்கு விற்றுள்ளோம் - மத்திய அரசு

விற்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்காகவும் உள்பயன்பாடுக்காவும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 12, 2019, 10:51 PM IST
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட தகவல்களை ₹65 கோடிக்கு தனியாருக்கு விற்றுள்ளோம் - மத்திய அரசு
கோப்புப்படம்
Web Desk | news18
Updated: July 12, 2019, 10:51 PM IST
இந்தியாவில் ஓட்டுநர்கள் உரிமம் குறித்தான தகவல்களை தனியாருக்கு விற்றுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளிக்கையில், இந்திய ஓட்டுநர் உரிமங்கள் குறித்த தகவல்களை 65 கோடி ரூபாய்க்கு 87 தனியார் நிறுவனங்களிடம் விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய தகவல்கள் மையம், வாஹன் (இந்தியாவின் அத்தனை வாகன விவரங்களும் உள்ள டேட்டாபேஸ்) மற்றும் சாரதி (ஓட்டுநர்கள் விவரங்கள் அடங்கிய டேட்டாபேஸ்) திட்டம் மூலம் தகவல்களை சேமித்துள்ளது. இதில் 25 கோடிக்கும் அதிகமான வாகனப் பதிவு விவரங்கள், சுமார் 15 கோடி வாகன ஓட்டுநர்கள் விவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.


மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் ’மொத்தமாக தகவல்கள் பரிமாறும்’ திட்டம் மூலம் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல்கள் விற்கப்பட உள்ளது என்றும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

விற்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்காகவும் உள்பயன்பாடுக்காவும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஜாவா மோட்டார் சைக்கிள் புக் செய்திருக்கிறீர்களா...? இன்னும் 10 மாசம் காத்திருக்கணும்!
First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...