ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

லைசன்ஸ் வாங்க இனி ஆர்.டி.ஓ.வில் வாகனத்தை ஓட்டிக்காட்ட தேவையில்லை: மத்திய அரசு!

லைசன்ஸ் வாங்க இனி ஆர்.டி.ஓ.வில் வாகனத்தை ஓட்டிக்காட்ட தேவையில்லை: மத்திய அரசு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இத்தகைய பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுபவர்கள், ஆர்.டி.ஓ. ஓட்டுநர் பயிற்சி தேர்வில் பங்கேற்க தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வாகன ஓட்டுநர் பயிற்சி மையம், லைசன்ஸ் ஆகியவை தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில்வாகன பெருக்கம் என்பது கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மாசு, போக்குவரத்து நெரிசல் போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. இதேபோல், வாகனம் ஓட்டுவது தொடர்பாக போதிய அறிவும், அனுபவமும் இல்லாமல் பலர் வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது போன்றை காரணமாக விபத்துகளும் அதிகளவில் நிகழ்கின்றன.

ஒருசில தனியார் வாகன ஓட்டுநர் பயிற்சி மையங்கள், உரிய பயிற்சியை வழங்காமல், பணத்தை பெற்றுக்கொண்டு வாகன ஓட்டுநர் உரிமத்தை தங்களது மாணவர்களுக்கு பெற்று தருவதாகவும், இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அரசு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில், பயிற்சி பெறுபவர்கள் உயர்தர பயிற்சியை பெற பிரத்யேக ஓடுதளம், பயிற்சி கருவிகளை பொருத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. கொரோனா நோயாளிகளுக்கு சேவிங், ஹேர் டிரையிங்..

மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி படிப்புகளை இந்த மையங்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும், இந்த மையங்களில் தேவை சார்ந்த சிறப்பு பயிற்சிகளை வழங்கவும் அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லைசன்ஸ் பெற விரும்புவோருக்கு சலுகை

மேலும், லைசன்ஸ் பெற விரும்புவோருக்கான சலுகையையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட இத்தகைய   ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்படும் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தகைய அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும்போது, நிபுணத்துவம் பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும், அதனால், சாலை விபத்துகள் குறையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் ஒன்றாம் தேதி இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

Published by:Murugesh M
First published:

Tags: Central government, Driving License