முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / சென்னையில் இதுப்போன்ற கேமரா ஆட்டோவை பார்த்திருக்கிறீர்களா..? காரணம் என்ன தெரியுமா?

சென்னையில் இதுப்போன்ற கேமரா ஆட்டோவை பார்த்திருக்கிறீர்களா..? காரணம் என்ன தெரியுமா?

ஸ்ட்ரீட் வியூ சேவைக்காக ஆட்டோ

ஸ்ட்ரீட் வியூ சேவைக்காக ஆட்டோ

ஆட்டோ மேல் பெரிய கேமிராவுடன் சாலையில் ஓடியது என்றால் அது கூகிள் ஸ்ட்ரீட் வியூக்காக தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் கூகுள் வரைபடம் ஸ்ட்ரீட் வியூ சேவைக்காக தற்போது புகைப்பட தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளது. அதில் இந்தியச் சாலைகளுக்கு ஏற்ப ஆட்டோ பயன்படுத்தப்படுகிறது.

கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் எண்ணற்ற சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்று கூகுள் வரைபடம் (Google Map). அதிகப்படியாக உபயோகப்படுத்தப்படும். இதில் ஸ்ட்ரீட் வியூ என்ற ஒரு வசதியுள்ளது. ஸ்ட்ரீட் வியூ மூலம் எங்கே இருந்து வேண்டுமானாலும் கிளிக் செய்யும் இடத்தை நேரடியாகப் பார்ப்பதுபோல் உண்மையான புகைப்படங்களுடன் பார்க்கலாம். கவலைக்குரியதாக இந்த வசதியில் இந்தியா இல்லை. 11 வருடம் கழித்து தற்போது இதற்கான வேலையைக் கூகுள் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இந்த வசதிக்கான பணிகளைச் செய்ய இந்திய நிறுவனங்களான டெக் மஹிந்திரா மற்றும் ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் கூகுளுடன் இணைந்துள்ளனர்.

இந்தியாவில் முதற்கட்டமாக 10 நகரங்கள் ஸ்ட்ரீட் வியூக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் ஸ்ட்ரீட் வியூக்காக புகைப்படம் எடுக்க ஆட்டோ பயன்படுத்தப்படுவதைப் பதிவிட்டுள்ளார். ஆமாம் இந்தியச் சாலையில் அமெரிக்காவில் உபயோகிக்கும் பெரிய கார் இல்லாமல் ஆட்டோவை தான் தற்போது பயன்படுத்துகின்றனர். இது குறைந்த செலவில் தேவையான வேலையைச் செய்து தருகிறது.

ஆட்டோ மேல் பெரிய கேமிராவுடன் சாலையில் ஓடியது என்றால் அது கூகிள் ஸ்ட்ரீட் வியூக்காக தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களிலும் தற்போது பயன்படுத்தப்படும் ஆட்டோவை போலச் சாலைகளுக்கு ஏற்றது போல் வாகனம் மாற்றப்படும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

கூகிள் ஸ்ட்ரீட் வியூ வசதிக்காக இந்தியாவில் பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, ஹைட்ரபாத், புனே, நாசிக், வதோதரா, அஹ்மட்நகர் மற்றும் அம்ரித்சர் என்ற 10 நகரங்கள் முதல் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 இறுதிக்குள் 50 நகரங்களுக்கு மேல் ஸ்ட்ரீட் வியூ வசதியைக் கொண்டுவரக் கூகிள் நிறுவனம் செயல்பட்டுவருகிறது

First published:

Tags: Anand Mahindra, Auto, Google, Google map, Mahindra