ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

விற்பனை துவங்கிய 2 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த 650 ட்வின்ஸ் அனிவர்சரி எடிஷன்... ராயல் என்ஃபீல்டு சாதனை

விற்பனை துவங்கிய 2 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த 650 ட்வின்ஸ் அனிவர்சரி எடிஷன்... ராயல் என்ஃபீல்டு சாதனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தனது 650 டிவின் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகள் குறித்த அறிவிப்பை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. எனவே பைக் பிரியர்கள் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் 650 ட்வின்ஸ் அனிவர்சரி எடிஷனின் (650 Twins Anniversary Edition) 120 யூனிட்களை வெறும் 120 வினாடிகளில் அதாவது 2 நிமிடங்களில் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளதாக மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு அறிவித்துள்ளது. 2 நிமிடங்களில் விற்று தீர்ந்த 120 யூனிட் மோட்டார்சைக்கிள்களும் முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த விற்பனை கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு தொடங்கியது,

மேலும் அனைத்து பைக்குகளும் ராயல் என்ஃபீல்டின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான www.royalenfield.com/120thedition-ல் சாதனை நேரமான 2 நிமிடங்களுக்குள் விற்கப்பட்டன. இந்த சிறப்பு விற்பனையின் போது Interceptor INT 650 மற்றும் Continental GT 650 ஆகிய மாடல்களில் தலா 60 யூனிட்கள் விற்கப்பட்டன. இந்த ஸ்பெஷல் எடிஷன் மோட்டார் சைக்கிள்கள் நிறுவனத்தின் 120 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. எனவே இவை ஸ்பெஷல் பேட்ஜ்கள் மற்றும் ஸ்பெஷல் லைவரி உள்ளிட்டவற்றோடு வருகின்றன.

தனது 650 டிவின் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகள் குறித்த அறிவிப்பை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. எனவே பைக் பிரியர்கள் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். தவிர சர்வதேச அளவில் இந்த ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளின் 480 யூனிட்களை மட்டுமே விற்க திட்டமிட்டு உள்ளதாகவும், இதில் 120 யூனிட்கள் மட்டுமே இந்தியாவிற்கு என்று ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் எப்போது விற்பனை துவங்கும் என்று புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்பெஷல் எடிஷனை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் காத்திருந்தனர்.

ALSO READ |  குருவாயூர் கோவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட புத்தம் புதிய எஸ்யூவி

இதனை தொடர்ந்தே டிசம்பர் 6 மாலை துவங்கிய 650 டிவின் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளின் விற்பனை, துவங்கிய 2 நிமிடங்களிலேயே முடிந்துள்ளது. 2 நிமிடங்களில் மொத்தம் இருந்த 120 யூனிட்டுகளும் (60 யூனிட் இன்டர்செப்டர் ஐஎன்டி 650 மற்றும் 60 யூனிட் கான்டினென்டல் ஜிடி 650 ) விற்றுத் தீர்ந்து விட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இதன் மூலம் ஸ்பெஷல் எடிஷன் பைக்குகள் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றதாக கூறி இருக்கிறது.

ALSO READ |  இந்தியாவில் இந்த வருடம் வெளியான சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

உலகளவில் 480 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும் ராயல் என்ஃபீல்டின் Anniversary Edition 650 Twin motorcycles, EICMA 2021-ல் வெளியிடப்பட்டது. பிராண்டின் 120 ஆண்டு பயணத்தை குறிக்கும் ஹேண்ட்கிராஃப்டட் பிராஸ் டேங்க் பேட்ஜஸ் மற்றும் ரிச் பிளாக்-க்ரோம் கலர் ஸ்கீமுடன் வருகிறது. லிமிடெட் எடிஷன் மோட்டார் சைக்கிள்கள் விரைவில் தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறி இருக்கிறது.

First published:

Tags: Royal enfield