Home /News /automobile /

இந்தியாவில் தீப்பிடிக்காத Fireproof பேட்டரிகளை அறிமுகப்படுத்த தயார் - கோமகி நிறுவனம்

இந்தியாவில் தீப்பிடிக்காத Fireproof பேட்டரிகளை அறிமுகப்படுத்த தயார் - கோமகி நிறுவனம்

எலக்ட்ரிக் வாகனம்

எலக்ட்ரிக் வாகனம்

கார்களை வாங்க விரும்பும் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது குறித்து அதிகம் பரிசீலித்து வருகின்றனர்.

சில மாதங்களாக உயராமல் இருந்த எரிபொருள் ( பெட்ரோல் மற்றும் டீசல் ) விலை, கடந்த சில நாட்களாக மீண்டும் உயர துவங்கி இருகிறது. எரிபொருள் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்க துவங்கின.

இதனை தொடர்ந்து மக்களும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். இதனை தொடர்ந்து கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் சிறிது சிறிதாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை மெல்ல மெல்ல சூடுபிடிக்க துவங்கியது. இந்நிலையில் ஓலா போன்ற முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கி தங்கள் எலெக்ட்ரிக் டூ வீலர்களை அறிமுகப்படுத்தின.

இதனை தொடர்ந்து தற்போது புதிய ஸ்கூட்டர்கள் அல்லது கார்களை வாங்க விரும்பும் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது குறித்து அதிகம் பரிசீலித்து வருகின்றனர். இந்த பரிசீலனையில் இறங்கும் குறிப்பிட்ட சதவீதத்தினரின் தேர்வாக தற்போது எலெக்ட்ரிக் டூ வீலர்கள் அல்லது கார்கள் இருந்து வருகின்றன. பெட்ரோல் வாகனங்கள் பக்கமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் மக்கள் திரும்பி வரும் நிலையில்,  அவ்வப்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்த கூடியதாக இருந்து வருகின்றன.

சமீபத்தில் கூட எலெக்ட்ரிக் டூவீலருக்கு இரவில் சார்ஜ் போட்டு விட்டு தூங்கிய தந்தை, மகள் உயிரிழந்த சம்பவமும் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதால், EV-க்களுக்கு பாதுகாப்பான பேட்டரிகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதே தற்போது அரசு மற்றும் நிறுவனங்களின் முக்கிய கவலையாக உள்ளது.

also read : ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள வாகன ஸ்கிராப் பாலிசி - இதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

இதனிடையே ஜனவரியில் ரேஞ்சர் மற்றும் வெனிஸ் உள்ளிட்ட 2 எலெக்ட்ரிக் டூ வீலர்கள் மற்றும் கடந்த மாதம் DT 3000 எலெக்ட்ரிக் டூ வீலராய் அறிமுகப்படுத்திய EV நிறுவனமான Komaki, இந்தியாவில் தீப்பற்றாத ஃபயர் ப்ரூஃப் பேட்டரிகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. Komaki நிறுவனத்தின் ஆப்ரேஷன் ஹெட் சுபாஷ் ஷர்மா கூறுகையில், பேட்டரி பாதுகாப்பு என்பது ஆற்றலை பயன்படுத்த, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் உள்ளது என்றார். பெரும்பாலும் 3 காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிகின்றன. மோசமான குவாலிட்டி கொண்ட லித்தியம், பேட்டரியின் உள்ளே காணப்படும் செல் லீக்கேஜ், பேட்டரி கன்ட்ரோலர் மற்றும் பவர்டிரெய்ன் அளவுருக்களுக்கு இடையே மிஸ்மேட்ச் ஆவது என்றும் ஷர்மா கூறி உள்ளார்.

மேலும் பேசிய ஷர்மா பெட்ரோல் மற்றும் லித்தியம் இரண்டும் அதிக தீப்பற்ற கூடியவை. இரண்டிற்குமான ஒரே வித்தியாசம் தீ பிடிக்கும் வெப்பநிலை தான். பெட்ரோல் தானே பற்றி எரிவதற்கான வெப்பநிலை 210+ டிகிரி செல்சியஸ், அதுவே லித்தியத்திற்கு இது 135+ டிகிரி செல்சியஸாக இருக்கிறது என்றும் விளக்கம் அளித்தார். ICE இன்ஜின்களை அறிமுகப்படுத்திய போதும் இந்த சிக்கல்கள் இருந்தன, பின்னர் காலப்போக்கில் சரி செய்யப்பட்டது.

எலெக்ட்ரிக்கை பொறுத்த வரை புதிய துறை என்பதால் சிறிது காலத்திற்குள் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும் என்றார். எங்களது எலெக்ட்ரிக் வாகனங்கள் BMS மற்றும் கன்ட்ரோலரில் வெப்பநிலைக் கட்டுப்பாட்டு அம்சங்களுடன் தற்போதைய ஓட்டம் மற்றும் பேட்டரி திறன் ஆகியவற்றுக்கு இடையேயான துல்லியமான கணக்கீடு அளவுருக்கள் மூலம் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன. மேலும் விரைவில் fireproof பேட்டரிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுளோம் மற்றும் அந்த தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையையும் பெற உள்ளோம் என கூறி இருக்கிறார் சுபாஷ் ஷர்மா.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Electric car

அடுத்த செய்தி