Home /News /automobile /

ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.? 

ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.? 

நானோ கார்

நானோ கார்

Tata Nano Car | டாடா நானோ கார், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாமல் சரிவை நோக்கியே நகர்ந்ததால், 2009ம் ஆண்டு நானோ கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடுத்தர குடும்பங்களின் கார் கனவை நிறைவேற்றும் விதமாக டாடா நானோ காரை உருவாக்கியது. மிகவும் மலிவு விலை காரான இதன் ஆரம்ப விலை ரூ.2 லட்சமாக இருந்தது. ஆனால் ரத்தன் டாடாவின் கனவு திட்டமான இதற்கு போதுமான வரவேற்பு கிடைக்காததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2.26 லட்சம் ரூபாய் முதல் 3.20 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகி வந்த டாடா நானோ கார், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகததால் இறுதியாக பலவகையான மாறுபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது விற்பனை சரிவை நோக்கியே நகர்ந்ததால், 2019ம் ஆண்டு நானோ கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விலை நானோ கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 ஆண்டுகளிலேயே மூடுவிழா காணும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இது வெற்றிகரமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சரித்திரத்தில் சறுக்கலாக மாறியது. தற்போது அதே நானோ காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சோசியல் மீடியா ட்ரெண்டாக மாற்றியுள்ளது.

டாடாவுக்குச் சொந்தமான டைட்டன் குழுமத்தைச் சேர்ந்த கோல்ட்பிளஸ் ஜூவல்லரிக்கான பிராண்ட் பிரச்சாரத்தில், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் நானோ கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. நகைக்கடைக்கான விளம்பரம் என்பதால், நானோ கார் முழுவதும் தங்கம், வெள்ளி போன்ற உயர்ந்த விலையுள்ள உலோகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கண் கவரும் தங்க நகையைப் போலவே ஜொலி, ஜொலிக்கும் டாடா நானோ காரின் அமேசிங் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



கோல்டன் நானோ காருக்கு மேலும் அழகூட்டும் விதமாக வைரம், வெள்ளி, ரத்தினக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் மதிப்புள்ள சாதாரண நானோ காரை, பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய காட்சிப் பொருளாக மாற்ற 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சுமார் 8 மாதங்கள் பணியாற்றியுள்ளனர். பார்க்க சிறியதாக தெரிந்தாலும், நானோ காரை கோல்டன் காராக வடிவமைக்க பல கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

Also Read : 5 டோர் மஹிந்திரா தார் சோதனை ஆரம்பம்.. எப்போது அறிமுகம் தெரியுமா.?

அதாவது ஜீரோ டூ ஹீரோவாக நானோ காரை மாற்றியமைக்க, 80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, விலையுயர்ந்த வைரம் மற்றும் காஸ்ட்லியான ரத்தின கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டாடா நானோ கார் மீது பதிக்கப்பட்டுள்ள தங்கத்தில் உள்ள டிசைன்கள் அனைத்தும், இந்தியாவின் பாரம்பரிய நகை தயாரிப்பு முறைகளான நகாஷி, மீனகரி ஆகிய கலைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Also Read : காஷ்மீருக்கு சுற்றுலா போகா ஆசையா! மலிவு விலையில் IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்.! 

கோல்ட் பிளஸ் ஜூவல்லரி நிறுவனத்தின் விளம்பர பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள நானோ கார், விற்பனைக்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுமார் 2 லட்சம் மதிப்புள்ள நானோ காரை, தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவை கொண்டு அலங்கரிக்க சுமார் 22 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கார் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் உள்ள கோல்ட் பிளஸ் தங்க நகைக்கடைகள் முன்பு காட்சிக்காக வைக்கப்பட உள்ளன. அதன் பின்னர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் அறிமுகங்கள் மற்றும் பிற பிராண்ட்களின் நியூ புரோடக்ட் லாஞ்ச் ஆகியவற்றின் போது கோல்டன் நானோ காரை விளம்பரத்திற்காக பயன்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Gold, Tata motors

அடுத்த செய்தி