Home /News /automobile /

அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 500 எலெக்ட்ரிக் பேருந்துகளை கொள்முதல் செய்யும் கோவா அரசு!

அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்காக 500 எலெக்ட்ரிக் பேருந்துகளை கொள்முதல் செய்யும் கோவா அரசு!

Goa

Goa

Electric Bus | சுற்றுலாப் பயணிகளுக்கான பசுமை சூழலைக் காக்கும் பொருட்டு, பச்சை தொழில்நுட்பத்தை செயல்படுத்த கோவா அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கோவா என்றதுமே குதூகலமான சுற்றுலா இடம் என்பது நம் மனதில் சட்டென நினைவுக்கு வரும். அழகிய கடற்கரைகள், எங்கெங்கு காணினும் பசுமையான இயற்கை என்று சொர்க்கபுரி போல தோன்றும். அத்தகைய கோவாவுக்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான பசுமை சூழலைக் காக்கும் பொருட்டு, பச்சை தொழில்நுட்பத்தை செயல்படுத்த கோவா அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. கோவா மாநில மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகிய இரு தரப்பினரின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுற்றுலாவுக்கு பொதுப்போக்குவரத்து வசதி

கோவா மாநிலத்தில் மழைக்கால சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், வார இறுதி நாட்களில் சுற்றுலாவுக்கான பொதுப் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் பிரமோத் சாவந்த் அண்மையில் கூறியிருந்தார்.

இத்தகைய சூழலில், 500 எலெக்ட்ரிக் பேருந்துகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கையை கோவா அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து கோவா அரசின், ‘கடம்பா போக்குவரத்துக் கழகத்தின்’ தலைவர் நவீலிம் எம்எல்ஏ உல்ஹாஸ் துனேகர் கூறுகையில், “இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை துரிதமாக உற்பத்தி செய்வது மற்றும் ஏற்றுக் கொள்வது (ஃபேம்) என்ற திட்டத்தின் அடிப்படையில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.



பேருந்துகள் அனைத்தும் தனியார் நிறுவனத்தின் சார்பில் நிர்வகிக்கப்படும். மேலும் அவர்கள் சார்பில் ஓட்டுநரையும் பணியமர்த்தி விடுவார்கள். எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான நடத்துநர்களை மட்டுமே அரசுப் போக்குவரத்துக் கழகம் பணியமர்த்த உள்ளது. போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் நிறுவனம் வழங்கும் சேவைக்காக ஒரு கி.மீ. தொலைவுக்கு நாங்கள் ரூ.76 சேவைக் கட்டணமாக வழங்குவோம்’’ என்று தெரிவித்தார்.

Also Read : சிறுமியுடன் உரையாடியபோது உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி!

இயக்கத்தில் இருக்கும் எலெக்ட்ரிக் பேருந்துகள்

தற்போது கோவா அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 50 எலெட்க்ரிக் பேருந்துகள் குளிர்சாதன வசதியுடன் இயங்கி வருகின்றன. இரண்டாவது ஆர்டர் டெலிவரி செய்யப்படும் பட்சத்தில், மேற்கொண்டு 100 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது ஆர்டரின் கீழ் போக்குவரத்துக் கழகத்தில் 500 எலெக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் கிடைக்கப் பெற்றதும் போக்குவரத்து தடம் விரிவுபடுத்தப்படும் என்று உல்ஹாஸ் துனேகர் தெரிவித்தார்.

கோவா மாநில போக்குவரத்துக் கழகத்தில் ஏற்கனவே 350 டீசல் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், எலெக்ட்ரிக் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதால் சேவைகள் மற்றும் வழித்தடங்கள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

Also Read : எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் மிக உயரமான வானிலை நிலையத்தை அமைத்துள்ள சீனா

டீசல் பேருந்துகள் கொள்முதல் கிடையாது

கோவா மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளாக டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இனி வரும் காலங்களிலும் டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாது என்றும், தற்போதைய முடிவின் படி எலெக்ட்ரிக் பேருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Electric Buses, Goa

அடுத்த செய்தி