Home /News /automobile /

நிக்கல் விலையில் அதிரடி உயர்வு... உலகளாவிய மின்சார வாகன உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு

நிக்கல் விலையில் அதிரடி உயர்வு... உலகளாவிய மின்சார வாகன உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

EV Vehicle Production | தற்போதைய தகவல்களின்படி நிக்கலின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 100,000 டாலரக்கும் மேல் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் உற்பத்தி மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பெயிண்ட் மற்றும் அலாய் சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உலகில் விநியோக சங்கிலிகளை பாதித்து உள்ளதால் முக்கிய மூலப்பொருளான நிக்கலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இதன் விலை கடந்த சில நாட்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

தற்போதைய தகவல்களின்படி நிக்கலின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,00,000 டாலருக்கும் மேல் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு சுமார் 111 சதவீத உயர்வை உள்ளடக்கியது. மேலும் இந்த ஜெட் வேக விலை உயர்வு காரணமாக லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் (LME) இரும்பு அல்லாத உலோகத்தின் (non-ferrous metal) வர்த்தகத்தை நிறுத்தியது. மேலும் இந்த விலையேற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள அதிகரித்த உள்ளீட்டுச் செலவுகள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தியை மந்தமாக்கி இருக்கிறது மற்றும் நுகர்வோருக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடியாததாக ஆக்குகிறது.

தற்போது உலகின் மிகப்பெரிய உலோக உற்பத்தியாளர்களில் ரஷ்யாவும் ஒன்று. உலகநாடுகள் சொல்லியும் கேட்காமல் உக்ரைன் மீது படையெடுத்ததால் ரஷ்யாவிற்கு எதிரான புதிய மற்றும் மிகவும் கடுமையான பொருளாதார தடைகள் உலகளாவிய உலோக விநியோகங்கள் வெகுவாக குறைந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. IIFL Securities-ஐ சேர்ந்த உயரதிகாரியான அனுஜ் குப்தா கூறுகையில், இந்த ஆண்டு தற்போது வரை சுமார் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிக்கல் விலையில் பெரும் ஏற்ற இறக்கத்தை நாம் கண்டுள்ளோம். EV தொழிற்சாலைகளின் உற்பத்திக்கு நிக்கல் அத்தியாவசியம் என்பதால் விநியோகம் மற்றும் தேவையின் பற்றாக்குறை காரணமாக விலை தொடர்ந்து அதிகரிக்கிறது என்றார்.

Also read... எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்காக சோனியுடன் கைகோர்க்கும் ஹோண்டா நிறுவனம்...

நிக்கல் பற்றாக்குறை அச்சத்தின் மத்தியில் வாங்குபவர்கள் (Buyers) பொருட்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. நிக்கல் மற்றும் பிற உலோகங்களான அலுமினியம், பல்லேடியம் மற்றும் EV-க்கள் உற்பத்திக்குத் தேவையான பலவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளில் ரஷ்யா முக்கியமான ஒரு நாடாகும். ரஷ்யா மீதான பன்னாட்டுத் தடைகள் மற்றும் மூலப்பொருள் ஏற்றுமதியில் ரஷ்யாவின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இந்த பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன என்று நிபுணர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

EV-க்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் நிக்கல் ஒரு முக்கிய அங்கமாகும். பேட்டரியின் கேத்தோடில் உலோகத்தை அறிமுகப்படுத்துவது பேட்டரிகளின் ஆற்றல் அடர்த்தியை அதிகரிக்கிறது, இதன் விளைவாக ஒரு பொருளுக்கு அதிக ரேஞ்ச் கிடைக்கும். பல OEM-க்கள் ஏற்கனவே பேட்டரிகளை பயன்படுத்துகின்றன. அவை சுமார் 60% நிக்கல் கொண்ட கேத்தோட்களை பயன்படுத்துகின்றன. LG Chem வழங்கும் டெஸ்லாவின் பேட்டரிகள் 90 சதவீதம் நிக்கல் கேத்தோட்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Electric bike, Electric car

அடுத்த செய்தி