ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ வரை பயணிக்கலாம்...அசத்தலாக அறிமுகமாகும் ஆஸ்ட்ரிட் லைட்..!

2400W மோட்டார் உடன் 1.7 KW லித்தியம் அயான் பேட்டரி கொண்டுள்ளது. பேட்டரியின் எடை மட்டும் 8.5 கிலோ ஆகும்.

Web Desk | news18
Updated: September 10, 2019, 5:02 PM IST
ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ வரை பயணிக்கலாம்...அசத்தலாக அறிமுகமாகும் ஆஸ்ட்ரிட் லைட்..!
ஆஸ்ட்ரிட் லைட்
Web Desk | news18
Updated: September 10, 2019, 5:02 PM IST
புதிய ஆஸ்ட்ரிட் லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜெமோபாய் எலெக்ட்ரிக் என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரீன் இ-மொபிலிட்டி மற்றும் ஒபாய் எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக ஜெமோபாய் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 முதல் 90 கி.மீ வரையில் பயணம் செய்யும் வகையிலான ஆஸ்ட்ரிட் லைட் ஸ்கூட்டரின் விலை 79,999 ரூபாய் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

நியான், இண்டிகோ, சிவப்பு, கறுப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய ஐந்து நிறங்களில் ஆஸ்ட்ரிட் லைட் வெளி வருகிறது. இதுகுறித்து ஜெமோபாய் துணை நிறுவனர் அமித் ராஜ் சிங் கூறுகையில், “தினசரி தேவைக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்பதால் ஆஸ்ட்ரிட் லைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


நகரங்களுக்கு ஏற்ற வகையில் நுகர்வோரின் தேவைக்குத் தகுந்தபடி பட்ஜெட் விலையிலும் அறிமுகம் செய்துள்ளோம். இதற்காக ஸ்டைல், வடிவமைப்பு, தரம் மற்றும் சேவையில் நாங்கள் சமாதானம் செய்துகொள்ளவில்லை” என்றார். மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லும் ஆஸ்ட்ரிட் லைட் மூன்று ட்ரைவிங் மோட் கொண்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ், சிட்டி மற்றும் எகானமி ஆகிய மூன்று ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. 2400W மோட்டார் உடன் 1.7 KW லித்தியம் அயான் பேட்டரி கொண்டுள்ளது. பேட்டரியின் எடை மட்டும் 8.5 கிலோ ஆகும்.

மேலும் பார்க்க: ₹1.05 லட்சம் வரையில் தள்ளுபடி... மாருதி சுசூகி கார்களுக்கு அதிகப்படியான சலுகை!

Loading...

அரசு உதவி பெறும் பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு!
First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...