’உயிரைப் பாதுகாக்கவே அதிகப்படியான அபராதங்கள்..’- விளக்கும் நிதின் கட்காரி

’சட்ட விதிமுறைகளை மீறாதோர் அபராதம் குறித்துப் பயம் கொள்ளவே தேவையில்லை. சட்டத்தை மீறினால் மட்டுமே கடுமையான அபராதம் விதிக்கப்படும்’.

Web Desk | news18
Updated: September 11, 2019, 9:11 PM IST
’உயிரைப் பாதுகாக்கவே அதிகப்படியான அபராதங்கள்..’- விளக்கும் நிதின் கட்காரி
நிதின் கட்காரி
Web Desk | news18
Updated: September 11, 2019, 9:11 PM IST
’கட்டாயமாக அதிகப்படியான அபராதங்கள் வசூல் செய்யப்படுவதற்கான முக்கியக் காரணமே உயிர்களைப் பாதுகாக்க வேண்டிதான்’ என விளக்கம் அளித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகப்படியான அபராதங்கள் வசூல் செய்யப்படுவதாகப் புகார்கள் எழும் நேரத்தில் இம்முறையை மாற்றி அதிக அபராதங்கள் விதிக்கப்போவதில்லை என்ற உத்தரவை குஜராத் அரசு வெளியிட்டது.

குஜராத் அரசின் முடிவு குறித்து சிஎன்என் நியூஸ் 18-க்கு மத்திய போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். நிதின் கட்காரி பேசுகையில், “புதிய மோட்டார் வாகனச் சட்டம் என்பது ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்தது. அதில் மாற்றங்கள் செய்தால் எனக்கேதும் பிரச்னையில்லை.


சட்ட விதிமுறைகளை மீறாதோர் அபராதம் குறித்துப் பயம் கொள்ளவே தேவையில்லை. சட்டத்தை மீறினால் மட்டுமே கடுமையான அபராதம் விதிக்கப்படும். உயிர்களைப் பாதுகாக்கவே இந்த கடுமையும் காட்டப்படுகிறது. இது அவசியமும் கூட. காரணம், சாலை விதிமுறைகளை மக்கள் எளிதாக எடுத்துக்கொண்டு மதிக்காமல் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே கடுமை காட்டப்படுகிறது” என்றார்.

மேலும் பார்க்க: ’வேகமாக சென்றதால் என் காருக்கும் அபராதம் விதித்துள்ளார்கள்’- ட்ராஃபிக் அபராதம் குறித்து நிதின் கட்கரி

அபராதத்தைக் குறைத்து அமல்படுத்த தமிழக அரசு முடிவு

Loading...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...