கடந்த சில மாதங்களாக நாட்டில் எலெக்ட்ரிக் டூ வீலர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் எரிபொருள் விலையில் காணப்படும் வரலாறு காணாத விலையேற்றம், மறுபுறம் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தி சுற்றுசூழலை பாதுகாக்கும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் முடிவுகளை எடுத்துள்ள முன்னணி வாகன தயாரிப்பாளர்கள் காரணமாக எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.
இதனிடையே பெங்களூருவை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் பேட்டரி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான Log9 மெட்டீரியல்ஸ் (Log9 Materials) நிறுவனத்துடன், பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) பார்ட்னர்ஷிப் சேர்ந்துள்ளதாக அறிவித்து உள்ளது.
Log9 Materials நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள ஹீரோ எலெக்ட்ரிக் இதன் மூலம், அதன் முழு அளவிலான EV-க்களுக்கும் இன்ஸ்டாசார்ஜிங் பேட்டரி பேக்ஸ்களை வழங்க உள்ளது. Log9 நிறுவனத்தின் ரேபிட்எக்ஸ் பேட்டரிகளின் (InstaCharging RapidX battery) ஒருங்கிணைப்பு Hero EV டூ-வீலர்களை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அட்டகாசமான புதிய அப்டேட்
Log9-ன் ‘RapidX’ பேட்டரிகளின் ஒருங்கிணைப்பு 15 நிமிடங்களில் Hero Electric 2W-ஐ முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது. Log9 நிறுவனம் தன் RapidX பேட்டரிகளை Amazon, Shadowfax, Delhivery, Flipkart மற்றும் BykeMania போன்ற பல B2B ஃப்ளீட் ஆபரேட்டர்களில் தொடர்ச்சியான பைலட்ஸ் (series of pilots) மூலம் டெஸ்டிங் செய்துள்ளது.
Log9 மெட்டீரியல்ஸின் CEO டாக்டர் அக்ஷய் சிங்கால் பேசுகையில், ஹீரோ வாகன பிளாட்ஃபார்மில் உள்ள எங்களின் InstaCharge பேட்டரிகள் B2B லாஸ்ட் மைல் டெலிவரி துறைக்கு ‘சக்தி, செயல்திறன் மற்றும் மன அமைதியை’ வழங்கும். மேலும் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்கும், உமிழ்வைக் குறைப்பதற்கும் இது பயனளிக்கும் என்றார்.
இதையும் படிங்க:
புதிய எலக்ட்ரிக் பிக்கப் டிரக் – EV பிரிவில் டொயோட்டாவின் அறிமுகம்
இதனிடையே 9x ஃபாஸ்ட் சார்ஜிங், 9x சிறந்த செயல்திறன், 9x குறைந்த பேட்டரி சிதைவு மற்றும் 9x பேட்டரி லைஃப் ஆகியவற்றை வழங்கும் பேட்டரிகளை உருவாக்க Log9 நிறுவனம் அதன் செல்-டு-பேக் (cell-to-pack ) திறனை மேம்படுத்தியுள்ளது. Hero Electric மற்றும் Log9 ஆகிய நிறுவனங்கள் இந்த பேட்டரிகளை நேரடி விற்பனை மற்றும் பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (Battery-as-a-Service) பிசினஸ் மாடல்கள் மூலம் சந்தைக்கு கொண்டு வரும் என தெரிகிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறுகையில், "சில B2B வணிகங்கள் தங்கள் டெலிவரி நடவடிக்கைகளில் குறைந்தபட்ச தடங்கலுடன் நீண்ட நேரம் பைக்குகளை தொடர்ந்து இயக்க விரும்புகின்றன. இத்தகைய வாடிக்கையாளர்களுக்காகவே இப்போது நாங்கள் Log9 பேட்டரிகள் கொண்ட பைக்குகளை வழங்க உள்ளோம். இவற்றை ஓட்டுபவர் ஒரு டீ குடிக்கும் கேப்பில் கூட வேகமாக சார்ஜ் செய்ய முடியும்” என்றார்.
இதையும் படிங்க:
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் Yasir Shah மீது போலீசார் வழக்குப்பதிவு
Log9-ன் ‘RapidX’ பேட்டரிகள் 30 - 60 டிகிரி செல்சியஸ் வரை செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான ஆப்ரேஷனல் லைஃப் உடன் வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.