ஸ்மார்ட்போன் டூ எலக்டிரிக் கார் உற்பத்தி - சியோமி மெகா ப்ளான்!

மாதிரி படம் (hindustantimes)

பாரம்பரியமாக கார் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இணையாக டெக் உலகில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நிறுவனங்களும் கால்பதிக?

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் சியோமி, கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors) நிறுவனம் வழியாக எலக்டிரிக் கார் உற்பத்தியில் கால்பதிக்க உள்ளது.

எலக்டிரிக் கார் உற்பத்தியை அனைத்து நாடுகளும் ஊக்குவித்து வருவதால், பாரம்பரியமாக கார் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இணையாக டெக் உலகில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நிறுவனங்களும் கால்பதிக்க முடிவு செய்துள்ளன. பெட்ரோல், டீசல் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அந்த கார்களின் பயன்பாட்டைக் குறைக்க இந்தியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் முடிவு செய்துள்ளன. அதற்காக நீண்ட கால திட்டங்களை வகுத்து, எலக்டிரிக் கார் உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றன.

வரும் காலத்தில் மிகப்பெரிய தொழில்சந்தையாக மாறப்போகும் எலக்டிரிக் கார்களை உற்பத்தி செய்வதில் ஏற்கனவே களத்தில் குதித்துவிட்டது. அமெரிக்கா மட்டுமின்றி சீனாவிலும் தொழிற்சாலையை உருவாக்கி உலகின் முன்னணி எலக்டிரிக் கார் உற்பத்தியாளராக டெஸ்லா விளங்கி வருகிறது. செல்போன் துறையில் ஜாம்பவானாக இருந்த ஆப்பிள் நிறுவனமும் எலக்டிரிக் கார் உற்பத்தியில் கால்பதிக்க முடிவெடுத்து அதற்கான கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், சியோமி நிறுவனமும் எலக்டிரிக் கார் உற்பத்தியில் தடம் பதிக்க முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனத்தின் இந்த முடிவு எலக்டிரிக் கார் உற்பத்தி சந்தையில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்டிரிக் கார் உற்பத்தியில் களமிறங்க உள்ள சியோமி நிறுவனத்தின் 5 முக்கிய ப்ளான்கள்களை பார்க்கலாம்

1. ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது சியோமி. கடந்த ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஆப்பிள் நிறுவனத்தை விஞ்சியதுடன், உலகின் 3வது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக மாறியுள்ளது. ஸ்மார்ட்போன் மட்டுமின்றி தொலைக்காட்சி உபகரணங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்டவற்றையும் சியோமி நிறுவனம் தயாரித்து வருகிறது.

2. சியோமி நிறுவனம் ஏற்கனவே கார் உற்பத்தி சந்தையில் களம் கண்டுள்ளது. அப்போது, அந்த நிறுவனத்தின் உற்பத்தி வரவேற்பை பெறாததால் தடுமாற்றத்தை சந்தித்தது. லம்போர்கினியின் கோகார்ட் புரோ சூப்பர் காரால் ஈர்க்கப்பட்டு, அந்த நிறுவனத்துடன் கரம் கோர்த்தது. அதில், ரெட்மி பெஸ்டியூன் டி77 (Redmi Bestune T77) எஸ்.யூ.வி மாடலை தயார்படுத்தி விற்பனைக்கு கொண்டுவந்தது.

3. தற்போது, கிரேட் வால் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையைப் பயன்படுத்தி எலக்டிரிக் கார் உற்பத்தியில் ஈடுபட சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானவுடன் சியோமி மற்றும் கிரேட்வால் நிறுவன பங்குகளின் விலை மளமளவென உயர்ந்தன. இந்தமுறை சியோமி நிறுவனம், கார் உற்பத்தி சந்தையில் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... டெஸ்லா கார்களுக்கு திடீர் தடை - சீன ராணுவம் அதிரடி உத்தரவு!

4. சியோமி நறுவனம் எலக்டிரிக் கார் உற்பத்தியில் இறங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பல்வேறு தகவல்கள் மற்றும் யூகங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள லீ ஜூன், எலக்டிரிக் கார் உற்பத்தியில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் அதற்கான முழு முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. உலகில் உள்ள சாலைகளின் தன்மையைப் பொறுத்து எலக்டிரிக் கார் உற்பத்தி சந்தையில் தடம் பதிக்க அந்த நிறுவனம் யோசித்து வருவதாகவும் தெரிகிறது.

5. சியோமி நிறுவனம் எலக்டிரிக் கார் உற்பத்தி சந்தையை தேர்தெடுப்பதற்கு முக்கிய காரணம் எலக்டிரிக் கார்களில் அதிகப்படியான கேஜெட்டுகள் மற்றும் அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாடிக்கையாளர்களும் அதனை விரும்புவதால், ஸ்மார்ட்போன் மற்றும் டெக் உலகில் முன்னணியில் இருக்கும் அந்த நிறுவனம் எலக்டிரிக் கார் உற்பத்தி சந்தையை தேர்தெடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: