25 ஆண்டுகள்.. 90 லட்சம் கார்கள்.. சாண்ட்ரோ முதல் கிரெட்டா வரை.. இந்தியாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த ஹூண்டாய்!

25 ஆண்டுகள்.. 90 லட்சம் கார்கள்.. சாண்ட்ரோ முதல் கிரெட்டா வரை.. இந்தியாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த ஹூண்டாய்!

ஹூண்டாய்

நாடு முழுவதும் 1,154 விற்பனை நிலையங்களையும், 1,298 சர்வீஸ் நிலையங்களையும் வைத்துள்ளது ஹூண்டாய். 2020-ல் ஹூண்டாய் நிறுவனத்தின் சந்தை பங்கு 17.4% ஆக உள்ளது.

  • Share this:
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இன்று தனது 25 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்து 26ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தென் கொரியாவின் சியோலை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் இன்று 25வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

அந்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து 25 ஆண்டுகளில் 90 லட்சத்துக்கும் அதிகமான கார்களை நாட்டில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அக்காலத்தில் அசைக்க முடியாத கார் மாடலாக திகழ்ந்த மாருதி சுசுகி நிறுவனத்தின் 800 மாடலுக்கு மாற்றாக சாண்ட்ரோவினை களமிறக்கி அதன் மூலம் தனது பயணத்தை இந்தியாவில் தொடங்கியது ஹூண்டாய் நிறுவனம். தற்போது கிரெட்டா, வென்யூ, கிராண்ட் ஐ20 முதல் கவர்ச்சிகர மாடல்களை விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். இந்த 25 ஆண்டுகளில் நாட்டின் 2வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக ஹூண்டாய் வளர்ந்திருக்கும் அதே நேரத்தில் கார் ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தையும் அந்நிறுவனம் பிடித்துள்ளது.

ஹூண்டாய்


ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான அடிக்கல் ஸ்ரீபெரும்புதூரில் மே 6, 1996ம் ஆண்டு நாட்டப்பட்டது. இங்கு MPFI எஞ்சின் கொண்ட சாண்ட்ரோவில் உற்பத்தி தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐ20. கெட்ஸ், அசெண்ட் போன்ற மாடல்கள் களம் கண்டன. 25 ஆண்டுகளை கடந்தும் ஹூண்டாய் சாண்ட்ரோ வெற்றிகரமான மாடலாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் நிறுவனம் இதுவரை இந்தியாவில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. மேலும் இங்கிருந்து 88 நாடுகளுக்கு தனது கார்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. 2008ல் 5 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்த நிலையில் அந்த எண்ணிக்கையை தற்போது 30 லட்சமாக ஹூண்டாய் உயர்த்தியுள்ளது.

ஹூண்டாய்


பயணிகள் வாகனங்களில் பல செக்மெண்ட்களிலும் கவனம் செலுத்தி வரும் ஹூண்டாய் தற்போது கிரெட்டா, வென்யூ, வெர்னா, ஆரா, சாண்ட்ரோ, ஐ20, கிராண்ட் ஐ10 நியாஸ், டஸ்கான் போன்ற மாடல்களை தனது லைன் அப்பில் வைத்துள்ளது.

நாடு முழுவதும் 1,154 விற்பனை நிலையங்களையும், 1,298 சர்வீஸ் நிலையங்களையும் வைத்துள்ளது ஹூண்டாய்.

2020-ல் ஹூண்டாய் நிறுவனத்தின் சந்தை பங்கு 17.4% ஆக உள்ளது.

இந்திய கார் சந்தையை பொறுத்தவரையில் நம்பர் 1 இடத்தில் பல தசாப்தங்களாக மாருதி சுசுகியே நீடித்து வருகிறது. தற்போது கியா போன்ற புதிய நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பிடத்தக்க போட்டியை கொடுத்து வருகின்றன. மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் வலுவாக வெளிப்படுவதற்கு தங்களை மீண்டும் உருமாற்றி வருகின்றனர்.
Published by:Arun
First published: