பெட்ரோல் வண்டிகளுக்கு மாற்றாக இந்தியாவில் தற்போது கிடைக்க கூடிய சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்.!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவை சேர்ந்த நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முன்னணி பிராண்டுகள் இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நுழைந்துள்ளன.

  • Share this:
பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் நிலையில் மானிய அதிகரிப்பு மற்றும் குறைந்த விலை காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பக்கம் மக்களின் பார்வை திரும்பி உள்ளது. எரிபொருள் விலையில் காணப்படும் தொடர்ச்சியான ஏற்றம் மற்றும் வழக்கமான டூ வீலர்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடையே காணப்படும் விலை வித்தியாசம் உள்ளிட்டவை காரணமாக வாடிக்கையாளர்களின் கவனத்தை மின்சார ஸ்கூட்டர்கள் ஈர்த்துள்ளன.

கொரோனா முதல் அலையில் மற்ற நிறுவனங்களை போல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டாலும், இரண்டாம் அலையின் தாக்கம் இருந்த போதும் எரிபொருள் விலை உச்சத்தை தொட்டதன் காரணமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன.

எனவே இந்தியாவை சேர்ந்த நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முன்னணி பிராண்டுகள் இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நுழைந்துள்ளன. மேலும் தொழில்நுட்ப ரீதியாக நல்ல தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகின்றன. நீங்கள் பெட்ரோல் டூ வீலரிலிருந்தது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற நினைத்தால் தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்க கூடிய சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ |  ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் செல்ல கூடிய சில எலெக்ட்ரிக் டூ வீலர்களின் பட்டியல்...!

ஓலா எலெக்ட்ரிக் S1 மற்றும் S1 ப்ரோ (OLA Electric S1 and S1 Pro):

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டு, சமீபத்தில் அவற்றை அறிமுகப்படுத்தியது ஓலா நிறுவனம். 8.5 கிலோவாட் உச்ச சக்தி கொண்ட ஓலா S1, ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர்களின் எக்ஸ் ஷோரூம் விலை முறையே ரூ.99,999 மற்றும் ரூ.1,21,999 ஆகும். தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேற்கண்ட இரண்டு வேரியன்ட்களை ஓலா அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும் திறன் பெற்ற ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், வெறும் 3 வினாடிகளில் மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும். ஓலா ஸ்கூட்டர் 750W போர்ட்டபிள் சார்ஜருடன் வருகிறது மற்றும் இதன் 2.9kWh பேட்டரியை 6 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். ஹைப்பர் சார்ஜ் நெட்வொர்க் மூலம், இந்த ஸ்கூட்டரை 18 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று ஓலா கூறியுள்ளது.

ஏதர் 450X (Ather 450X):

ஏதர் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.32 லட்சம் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 116 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல கூடியது இந்த ஸ்கூட்டர். அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தை வழங்கும் இது வெறும் 3.3 வினாடிகளில் மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. 2.61 கிலோவாட் பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர், 3 மணிநேரம் 35 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் ஏறும் என்று ஏதர் நிறுவனம் கூறி உள்ளது.

ALSO READ |  விரைவில் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் ’எலக்டிரிக் ஸ்கூட்டர்’ அறிமுகம்..

சிம்பிள் ஒன் (Simple One):

பெங்களூருவைச் சேர்ந்த சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் தயாரிப்பான சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், ஓலா ஸ்கூட்டருக்கு முக்கிய போட்டியாக கருதப்படுகிறது. ஓலா ஸ்கூட்டர் வேரியன்ட்களில் இருக்கும் பேட்டரியை விட (சிம்பிள் ஒன்அதிக சக்தி வாய்ந்த வகையில் சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் 4.8kWh பேட்டரி இருக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டரை Eco மோடில் பயன்படுத்தினால் அதிகபட்சம் 236 கிமீ தூரத்தை வழங்குகிறது.இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.09 லட்சம். இந்த ஸ்கூட்டரில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், சார்ஜ் நோக்கங்களுக்காக இதன் பேட்டரி நீக்கக்கூடிய ஒரு பாகமாக கொடுக்கப்பட்டுள்ளது.



 

பஜாஜ் சேதக் எலெக்ட்ரிக் (bajaj chetak electric):

பஜாஜ் சேதக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அர்பன் வேரியன்ட் விலை ரூ.1.42 லட்சம் மற்றும் ப்ரீமியம் வேரியன்ட் விலை ரூ.1.44 லட்சம். 2.9 kWh பேட்டரியுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் Eco மோடில் இந்த ஸ்கூட்டர் 95 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். மேலும் பஜாஜ் சேதக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்றும் இதன் லித்தியம் அயன் பேட்டரி 7 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பஜாஜ் நிறுவனம் கூறி உள்ளது.

ALSO READ |  ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்: ஆச்சரியப்படுத்தும் விலை, மைலேஜ் - முழு விவரம்!

டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube):

டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது அதிகபட்சமாக மணிக்கு 78 கிமீ வேகத்தில் செல்லும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை போகலாம். இந்த ஸ்கூட்டரில் 1.4 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்தில் 80% சார்ஜ் ஏறிவிடும். இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.15 லட்சம் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: