• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஹூண்டாய் முதல் நிசான் வரை - தீபாவளிக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கும் கார்கள்!

ஹூண்டாய் முதல் நிசான் வரை - தீபாவளிக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கும் கார்கள்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

கொரியா நிறுவனமான ஹூண்டாய், பண்டிகை காலத்தையொட்டி தங்கள் நிறுவன மாடல்களுக்கு அதிகப்பட்சமாக 1.50 லட்சம் வரையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

  • Share this:
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியிருப்பதால் ஆன்லைன் நிறுவனங்களும், கார் நிறுவனங்களும் தங்களின் மெகா தீபாவளி விற்பனையை இப்போதே தொடங்கிவிட்டனர். கார் நிறுவனங்கள் புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் முதல் இன்ஸ்சூரன்ஸ் வரை பல சலுகைகளை அறிவித்துள்ளனர்.

1. மாருதி சுசுகி :

மாருதி சுசுகி நிறுவனம், எட்டு வகையான மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. எஸ் பிரஸ்ஸோ மறும் ஆல்டோ மாடல்களுக்கு அதிகபட்ச தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய எஸ் -பிரெஸ்ஸோ மாடல் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.48,000 வரை பண பலன்கள் கிடைக்கும். ஆல்டோ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 43,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதேபோல், ஈகோ, வேகன் ஆர், ஸ்விப்ட் மற்றும் டிஸைர், இக்னிஸ் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கும் கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2. ஹூண்டாய் மோட்டார் :

கொரியா நிறுவனமான ஹூண்டாய், பண்டிகை காலத்தையொட்டி தங்கள் நிறுவன மாடல்களுக்கு அதிகப்பட்சமாக 1.50 லட்சம் வரையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. எலக்டிரிக் காரான கோனா எஸ்.யூ.வி உள்ளிட்ட 5 பிராண்டுகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எலக்டிரிக் காரான கோனா எஸ்.யூ.விக்கு 1.50 லட்சம் ரூபாய் சலுகை அறிவித்துள்ள ஹூண்டாய், சாண்ட்ரோ ஐ 20, கிராண்ட் ஐ 10, அவுரா கார்களுக்கும், இதே மாடல்களில் உள்ள சி.என்.ஜி கார்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. ரெனால்ட் :

பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட், தீபாவளி பண்டிகையையொட்டி 2.50 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதிகப்பட்சமாக ரெனால்ட் டஸ்டர் கார் 50,000 ரூபாய் வரை பணச் சலுகையும், 1.10 லட்சம் ரூபாய் வரையில் மற்ற சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் டிரைபர், கிகர், க்விட் ஆகிய கார்களுக்கு இதைவிட குறைவான தள்ளுபடி என்றாலும், விழாக்காலச் சலுகையாக சூப்பரான ஆஃபர்களை ரெனால்ட் அறிவித்துள்ளது.

4. நிசான் மோட்டார் :

அண்மையில் மேக்னைட் எஸ்.யூ.வியை அறிமுகப்படுத்திய ஜப்பானிய கார், கிக்ஸ் எஸ்.யூ.வி கார்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை ஆஃபர்களை அறிவித்துள்ளது. கிக்ஸ் எஸ்.யூ.வி கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வரும் கார்களுக்கு 9.49 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5. டாட்சன் :

டாட்சன் கார்களுக்கும் தீபாவளி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டாட்சன் பிராண்டுகளான டட்சன் கோ, கோ + மற்றும் ரெடிகோ கார்களுக்கு அதிகப்பட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. பணச்சலுகை, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

Also read... இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் மாருதி சுசுகியின் ஜிம்னி - அட்டகாசமான டீசர் வெளியீடு!

6. மஹிந்திரா மஹிந்திரா :

மஹிந்திரா மஹிந்திரா சில பிராண்டுகளுக்கு மட்டுமே சலுகைகளை அறிவித்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்.ஜி க்ளோஸ்டர் கார்களுக்கு கடும் போட்டியாக சந்தையில் இருக்கும் ஆல்டுராஸ் ஜி4 எஸ்.யூ.வி கார்களுக்கு 81,500 ரூபாய் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் 20,000 ரூபாய் வரை மற்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், KUV100 NXT, பொலெரோ, ஸ்கார்பியோ, XUV300 மற்றும் மராஸ்ஸோ MPV மாடல்களுக்கும் பண்டிகை கால சலுகைகளை மகேந்திரா அறிவித்துள்ளது.

7. டாடா மோட்டார்ஸ் :

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தீபாவளி காலத்தை குறிவைத்து ஏராளமான முன்னணி கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. நெக்ஸான், டியாகோ, டிகோர் மற்றும் ஹாரியர், சபாரி உள்ளிட்ட கார்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேரடியாக பணத் தள்ளுபடிகள் கொடுக்கப்படவில்லை என்றாலும், கார்ப்பரேட்ஸ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: