• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 30 ஆண்டுகளில் 550 வின்டேஜ் டூ வீலர்களை சேகரித்த புனே தொழிலதிபர் - மியூசியம் திறக்கும் முயற்சியில் தீவிரம்!

30 ஆண்டுகளில் 550 வின்டேஜ் டூ வீலர்களை சேகரித்த புனே தொழிலதிபர் - மியூசியம் திறக்கும் முயற்சியில் தீவிரம்!

 550 வின்டேஜ் டூ வீலர்களை சேகரித்த புனே தொழிலதிபர்

550 வின்டேஜ் டூ வீலர்களை சேகரித்த புனே தொழிலதிபர்

டூ வீலர்களின் கண்டிஷன்களை பொருட்படுத்தாமல் எந்த நிலையில் இருந்தாலும் தனக்கு தேவை என்றால் இவர் வாங்கி கொள்கிறார்.

  • Share this:
மகாராஷ்ட்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர் 55 வயதான வினித் கெஞ்சாலே (Vinit Kenjale). இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். 1940-ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய இரு சக்கர வாகனங்களின் கலெக்ஷன்களை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து வரும் ஸ்பெஷல் ஹாபியை கொண்டவர் இவர். இதில் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட டூ வீலர்கள் அடங்கும். வித்தியாசமான முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் வினித் கெஞ்சாலேவிடம் தற்போது வரை, 550-க்கும் மேற்பட்ட விண்டேஜ் பைக்குகளை வைத்திருக்கிறார்.

மேலும் தனது கலெக்ஷன்களை மக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் ஒரு மியூசியம் ஒன்றையும் திறக்க விரும்புகிறார். இதற்கான வெளிகளில் அவர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார். கடந்த1966 ஜூன் 18ல் பிறந்த வினித் கெஞ்சாலே, தனது 10 வயது முதலே பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் மீது ஆர்வம் கொண்டார். மேலும் இவர் பைக்குகளை சேகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை பழுது பார்த்து மீட்டெடுக்கும் வேலைகளிலும் மிக ஆர்வமாக ஈடுபடுவார். உலகப் போர் காலத்தில் புழக்கத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் கூட இவரது கலெக்ஷனில் இருக்கின்றன.

குழந்தை பருவத்திலிருந்தே தனது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அவர்களது பழைய வாகனங்களையும் விற்க விடாமல் அவற்றை இவரே சேகரித்தும் வைத்துள்ளார். பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை சேகரிக்க துவங்கி சுமார் 38 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது இவற்றை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அருங்காட்சியகம் திறக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார். தான் 10-ஆம் வகுப்பு படித்த போது முதன் முதலில் இன்னோசென்டி நிறுவனத்தின் லாம்ப்ரெட்டா (Lambretta) ஸ்கூட்டரை பார்த்ததாகவும், அந்த டூவீலரின் அழகில் முற்றிலும் மயங்கிவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.



 

அதன் பிறகு தான் இது மாதிரியான டூவீலர்களை கலெக்ஷன் செய்து வைக்க ஆசை ஏற்பட்டதாக கூறி இருக்கிறார். அதே போல பைக் கலெக்ஷன்களில் ஈடுபட மற்றொரு முக்கிய காரணம் 1980-களில் மக்கள் தங்களது பைக்குகளை மாற்றி கொண்டே இருந்தனர். பழைய மாடல்களை மக்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். அவற்றை வீணாக்க விட கூடாது என்ற எண்ணத்திலும் டூ வீலர்களை சேகரிக்க துவங்கியதாகவும் கூறுகிறார்.



தனது கலெக்ஷன்களில் எண்ணற்ற டூவீலர் மாடல்களை கொண்டுள்ள வினித், இதில் பெரும்பாலானவற்றை தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் அணுகிய வெளியாட்கள் உள்ளிட்டோர் நன்கொடையாக பெற்றுள்ளார். அதே சமயம் சில வின்டேஜ் டூ வீலர்களை தனது சொந்த பணத்தை செலவழித்தும் வாங்கி இருக்கிறார். டூ வீலர்களின் கண்டிஷன்களை பொருட்படுத்தாமல் எந்த நிலையில் இருந்தாலும் தனக்கு தேவை என்றால் இவர் வாங்கி கொள்கிறார்.

 



 

இவரது கலெக்ஷன்களில் எல்எம்எல் பிஎல் 170, கெல்வினேட்டர் ஸ்கூட்டர்கள், கைனெடிக் ஸ்கூட்டர்கள், ராஜ்தூத் ஸ்கூட்டர்கள், ரமோனா 1960 மற்றும் ஹெர்குலஸ் மொபெட் 1967 உள்ளிட்டவை அடங்கும்.



 

வினித் மற்றும் அவரது 12 ஊழியர்கள் கொண்ட டீம் இந்த பைக்குகளை பராமரித்து வருவதால், இவரிடம் உள்ள கிட்டத்தட்ட 90% பைக்குகள் நன்கு வேலை செய்யும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: