வந்தே பாரத் மிஷன் அடுத்த கட்டம் - இஸ்ரேல், சிங்கப்பூர், இலங்கைக்கு செல்லும் விமானம்!

மாதிரி படம்

கொரோனா வைரஸ் பரவலால் கடுமையான ஊரங்கு மற்றும் விமானப் போக்குவரத்து தடையால் வெளிநாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

  • Share this:
வந்தேபாரத் திட்டத்தின் அடுத்த கட்டம் ஜூன் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் 2வது அலை இந்தியாவில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து மேலும் நோய் பரவாமல் கட்டுப்படுத்தி வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான ஊரங்கும் அமலில் உள்ளது. வெளிநாடுகளிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளன. குறிப்பாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்கு தடை உள்ளது. குறிப்பிட்ட சில விலக்குகளுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா வைரஸ் பரவலால் கடுமையான ஊரங்கு மற்றும் விமானப் போக்குவரத்து தடையால் வெளிநாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு ஒன்றிய அரசு சார்பில் வந்தே பாரத் என்ற சிறப்புத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் பதிவு செய்பவர்கள், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து வரும் இந்த திட்டத்தில் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த கட்டங்களில், எஞ்சியிருப்பவர்களையும் அழைத்து வருவதற்கு ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

Also read... ஜூன் 30 வரை நீங்கள் வாங்கும் ஹோண்டா வாகனங்களுக்கு ரூ.33,000 தள்ளுபடி!

வந்தே பாரத் திட்டம் மட்டுமின்றி ஏர் பப்பிள் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு வர ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதாவது, கொரோனா காணமாக பல்வேறு நாடுகளும் வான்வழி போக்குவரத்து தடை விதித்துள்ள நிலையில், வர்த்தகம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மத்திய அரசு சார்பில் குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அந்த நாடுகளும், இந்தியாவும் பரஸ்பரம் விமானம் இயக்கிக் கொள்ளலாம். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பஹ்ரைன், கத்தார், ஓமன் உள்ளிட்ட 16 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு மட்டும் வந்தே பாரத் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அடுத்தக்கட்ட பயணத்தை ஒன்றிய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிவித்துள்ளார்.

ஜூன் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அடுத்தக்கட்டமாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும், அதில் இஸ்ரேல், சிங்கப்பூர், தாய்லாந்து, இத்தாலி, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு இருப்பதால் வெளிநாடுகளில் வசிப்போர் இங்கு வருதற்கு அச்சப்படுவதாவும் கூறப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: