இன்றைக்கு இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு விதவிதமான மாடல்களில் பைக்குகள் விற்பனை வரும் அதே வேளையில் சில நேரங்களில் ஏற்படும் விலை உயர்வும் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் தான் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பைக்குகளின் விலை உயரவுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே காரணம் என்ன? எவ்வளவு என்பது குறித்து பைக் வாடிக்கையாளர்களாகிய நாமும் அறிந்துக் கொள்வோம்.
டெல்லியைத் தலைமையிடாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் தான் ஹீரோ மோட்டாகார்ப். முன்னதாக ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வந்த நிலையில், தற்போது இரு நிறுவனங்களும் தனித்தனியாக பிரிந்து உற்பத்தி பணிகளைக் கவனித்து வருகிறது.
இந்த சூழலில் தான் தற்போது நாடு முழுவதும் ஏற்படும் பொருளாதார சூழல், பணவீக்க விகிதம் அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு மற்றும் உற்பததி பொருள்களுக்கான செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் படி, இருசக்கர வாகனங்களின் விலை ரூபாய் 1, 500 வரை அதிகரிக்கும் எனவும் இந்த விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாடல் வாகனத்துக்கும் வேறுபடும் என ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிரஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அக்டோபர் 2022ல் 4,54,582 யூனிட்களை உற்பத்தி செய்திருந்த நிலையில், நிறுவனம் 4,42,825 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உள்நாட்டு சந்தையில் 4,42,825 யூனிட்கள் விற்பனை செய்ததோடு ஏற்றுமதி என்பது 11,757 யூனிட்டுகளாக இருந்தது.மேலும் தற்போது ஏற்படும் விலை உயர்வைச் சமாளிக்கும் வகையில், Hero MotoCorp சேமிப்புத் திட்டங்களை விரைவுபடுத்துகிறது, இது நிறுவனத்திற்கு மேலும் செலவின தாக்கத்தை ஈடுகட்டவும், விளிம்புகளை மேம்படுத்தவும் உதவும் என்கிறார் நிரஞ்சன் குப்தா.
இந்நிறுவனம் அறிவித்துள்ள விலை உயர்வு என்பது இது முதல் முறை இல்லை எனவும், ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 2 ஆயிரமும், ஜுலையில் ரூபாய் 3 ஆயிரம், இந்தாண்டு செப்டம்பரில் ரூபாய் ஆயிரம் வரையிலும் அதிகரித்து அதிக உள்ளீட்டுச் செலவுகளை சரிகட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஏற்படவுள்ள விலை உயர்வு என்பது இது நான்காவது முறையாகும்.இந்த விலை உயர்வு என்பது வாகனப் பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Bike, Two Wheeler